நான் தேடியது

காற்றினிலே நான் தேடியது
உந்தன் முகத்தினைத்தானே
நல்லதொரு ஓவியமாய்!!!

நீரினிலே நான் தேடியது
உந்தன் பிம்பத்தைத்தானே
வற்றாத மகிழ்ச்சியலையாய்!!!


நிலத்தினிலே நான் தேடியது
உந்தன் காலடிச் சுவட்டினைத்தானே
பொன்னான பொறுமையின் எல்லையாய்!!!

ஆகாயத்திலே நான் தேடியது
உந்தன் கூந்தலைத்தானே
காரழகின் கார்மேகமாய்!!!

நெருப்பினிலே நான் தேடியது
உந்தன் கோபத்தைத்தானே
அநீதியின் வெளிப்பாடாய்!!!

பூவினிலே நான் தேடியது
உந்தன் வாசத்தினைத்தானே!!!

நிலவினிலே நான் தேடியது
உன்னிரு கரு விழிகளைத்தானே!!!

வானவில்லினிலே நான் தேடியது
உந்தன் புருவங்களைத்தானே!!!

மழைத்துளியினிலே நான் தேடியது
உன்னிடை வளைவினைதானே!!!

குயிலினிலே நான் தேடியது
உன் இனிய குரலினைதானே!!!

அருவியிலே நான் தேடியது
உந்தன் அன்பினைத்தானே!!!

வெளிச்சத்திலே நான் தேடியது
உந்தன் கண்களைத்தானே!!!

இருளினிலே நான் தேடியது
உந்தன் கண்மையினைதானே!!!

முத்துக்களில் நான் தேடியது
உந்தன் இதழ் சிரிப்பினைதானே!!!!

உன்னுள்ளே நான் தேடியது
எந்தன் இதயத்தினைதானே!!!!


++++++தேன் மொழி+++++++

எழுதியவர் : தேன் மொழி (15-Nov-16, 4:41 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : naan dediyathu
பார்வை : 193

மேலே