காயங்கள் கவிதைகளாகும்
கல்லைக் காயப்படுத்திதான்
சிலை வடிக்கிறான் சிற்பி !
மண்ணைக் காயப்படுத்திதான்
தாகம் தணிக்கிறான்
மனிதன்!
காற்றைக் காயப்படுத்திதான்
இசையின்பம் தருகிறது
புல்லாங்குழல் !
என்னைக் காயப் படுத்தியே
இன்பம் துய்க்கும்
பெண்ணே உன்னைப்போல !
பாதகமில்லையடி !
உன்னாலான காயங்களெல்லாம்
ஓராயிரம் கவிதைகளாய்
உருப்பெறுகின்றன
எனக்குள் !
ஆதலால் காதலியே !
காயப்படுத்திக் கொண்டேயிரு என்னை
எப்போதும் ...! (காதலுடன்)