மாத்திரைச் சுருக்கம்

விண்ணும் குறைந்தொலிக்க மேன்மைமிகு காடாகும்
பண்ணுடைய காலெடுக்கப் பாரமாம் ! - மண்ணிலே
உள்ளமெனக் குன்றிடும் ஒப்பிலாத் தன்மதிப்பும்
கள்ளிக்குன் றக்குலமாம் காண்.

(வானம் - வனம், கானம் - கனம், மானம் -மனம், ஈனம் - இனம் )

தன்மதிப்பு - மானம்
கள்ளி - ஈனம்
குலம் - இனம்

முயன்று பார்க்கலாம் : 6
*************************
*மாத்திரைச் சுருக்கம்*
இதுவும் சித்திரகவிகளுள் ஒன்று தான். மாத்திரை என்பது எழுத்துகளின் அளவு (நேரம்) என்று அறிவோம். குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரு மாத்திரை.
சுருக்கம் - குறைவது.
அஃதாவது, மாத்திரையைச் சுருக்குவதாகும். நெடிலாக நின்று பொருளுணர்த்தும் ஒரு சொல்லின் முதலெழுத்தைக் குறிலாக்கி வேறு பொருள் வருமாறு உய்த்துணர வைப்பது "மாத்திரைச் சுருக்கம் " ஆகும்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Nov-16, 12:12 pm)
பார்வை : 54

மேலே