கவிதையாய் ஒர் வரம்

கவிதையே !
உன்னைக் கடவுளாய்
நேசிக்கிறேன் !
ஆதலால் உன்னிடம்
ஓர் வரம் கேட்கிறேன் !

படைத்தவனிடம்
வரம் கேட்பது
நிதர்சனம் !

உன்னை படைப்பவன்
யாசிக்கிறேன் ,
நான் கொஞ்சம்
புதுவிதம் !

காதலையும்,காமத்தையுமே
வண்ணமாய் வார்த்தைகளில்
குழைத்து கவிதையென்று
காகிதம் நிரப்பும்
பாவம் எனக்கு வேண்டாம் !

யாதும் ஊரே , யாவரும்கேளிர் !
என்றவன், என் தமிழ் முன்னவன், உலகமே
ஓர் குடையின் கீழ்
கண்டவன் வழி வந்தவன்
நான் சொல்லும் கவி ;

மூட நம்பிக்கைகளின்
முகத்திரை கிழிப்பதாய்,
சமூக அவலங்கள்
அகற்றிடும் போர் முரசாய்,

உலக அமைதிக்கோர்
சங்க நாதமாய்,
இன,மொழி,மத
வேறுபாடுகளின்
வேரறுத்து,தேசங்களின்
எல்லைகள் கடந்து,
அண்ட் சராசரம்
கடந்தும் அன்பு
செலுத்தும் அகண்ட
இதயம் கொண்டவராய்
மொத்த மனித குலத்தையும்
மாற்றும் மந்திர கீதமாய் !

மனித குலத்திற்கே
சமத்துவ ரத்தம்
பாய்ச்சும் புதுவித
போர்க்கருவியாய்
என் கவி இருக்க வேண்டும் !

என் தாய்த் தமிழ்
உலக எல்லைகள்
கடந்தும் ஒளிவீசி சிறக்க வேண்டும் ! இது மட்டும்
நடந்து விட்டால்
கவிதையே !
எனக்கு வேண்டாம்
இன்னொரு ஜனனம் ?

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (19-Nov-16, 9:51 am)
பார்வை : 142

மேலே