புரியாத புது உணர்வு

அவள் செல்லும் வழிகளில்
அவளுக்காகவே சென்றாலும் அது
அவளுக்காகத்தானென்று தெரிந்துவிடக்கூடாது
என்பதில் கவனமாய் இருக்கிறேன்.

அவள் அருகில் வரும் நேரங்களில்
அவளிடம் பேசிவிடலாம் என்று நினைத்தாலும்
நான் பேச வேண்டி பயிற்சி செய்த
உரைகளை மறந்துவிடுகிறேன்.

அவள் என்னைக் கடந்து செல்லும்போது
பார்த்தாவதுவிடலாம் என்று நினைத்தாலும்
உள்ளுக்குள் இருக்கும் தயக்கத்தால்
தலை திரும்பி வந்துவிடுகிறேன்.

அவள் கடந்து சென்ற பிறகு
நான் தவறவிட்ட வாய்ப்புகளை
நாளையாவது சரியாக பயன்படுத்த
வேண்டுமென்று காத்திருக்கிறேன்.- அந்த
தவறவிடப்போகும் நாளைக்காக.

இந்த உணர்வுகளெல்லாம்
எதற்காக என்னுள் எழுகிறது?
இந்த உணர்வுகளுக்கு
பெயர்தான் என்ன?
புரியாமல் நான்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (19-Nov-16, 7:26 pm)
பார்வை : 170

மேலே