மன உறுதி

உறுதி உள்ளவனின்
உள்ளத்தில் திடமிருக்கும்,
உறுதியுள்ள உத்தமருக்கு
உலகமும் வளைந்து கொடுக்கும்

நெறியோடு வாழும்
நெஞ்சங்கள்
துணிவோடு மலைகளையும்
தகர்த்து எறிந்து விடும்

உறுதியை எப்போதும்
உரசி பார்க்கும் சோதனைகள்
உன்னை தடுமாற வைத்து
உள்ளத்தை நோகடிக்கும்,
விழித்திரு

பொன் நெருப்பால்
பிரகாசிக்கும்—அதுபோல
ஒருவனின் மன உறுதியால்
அவன் பிரகாசிப்பான், உறுதி.

எழுதியவர் : கோ.கணபதி (20-Nov-16, 8:53 am)
Tanglish : mana uruthi
பார்வை : 1149

மேலே