சண்டே வேலை

உண்மையிலே சண்டே வேலைக்கு போறவங்க எல்லாம் எதோ பிறவியில பாவம் பண்ணினவங்க தாங்க
காலையில எந்திரிக்கும் போதே அவ்வளவு கோபமா வரும் ,,
அதுலயும் இன்னைக்கும் வேளைக்கு போகனுங்கற உண்மைய உணரும் போதுதான்
துக்கம் தொண்டைய அடைக்கும்....
சரி என்ன பண்ண அப்படியே எழுந்திரிச்சு கிளம்பி போக தயாராவோம்
அப்போ தான் இந்த டீவில நமக்கு பிடிச்ச படமா போடுவாங்க சரி என்னடா இது வாழ்கைன்னு
மூஞ்சிய சோகமா வசுகிட்டு போவோம் ..
வாரம் முழுக்க இந்த பஸ்ல இடம் கிடைக்காது சரி இந்த ஞாயிறு அன்னைக்காவது
இடம் கிடைக்கும்னு ஆசையா போவோம் அப்பாவும் இந்த முகூர்த நாள் கோஸ்டிக இடத்தை
எல்லாம் நிரப்பிட்டு வந்திடுவாங்க ....
சரி போனா போவுதுன்னு சொல்லிடு கம்பெனிக்கு போவோம்
அங்க நம்மள திட்டுரதுக்குன்னே ஒரு க்ருப் காத்துகிட்டு இருக்கும்
சரி ஞாயிறு அன்னைக்காவது திட்டுறதுக்கு லீவு விடுவாங்கன்னு பார்த்தா
அன்னைக்கு தான் புது புது காரணமா யோசிச்சு வச்சு திட்டுவாங்க
சரி வுட்றா வுட்றான்னு நம்மள நாமலே தேத்திக்கிட்டு அடுத்த வேலைய பாப்போம்
சரி வேலைய பாக்கலாம் நினச்சா மீட்டிங் வர சொல்லுவாங்க
மீட்டிங்போனா என்ன வேலை செஞ்சு கிழிச்சன்னு கேட்கறாங்க ...
சரி லஞ்ச் டைம்ல ஆசையா சாப்பிட போவோம்
டிப்பன்பாக்ஸ் ஆசையா ஒப்பன் பண்ணுவோம்,,, ரசம் சாப்பாடு இருக்கும் பாருங்க
நம்ம எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாதுங்க ...
அடி போனை அம்மாவுக்கு "என்னம்மா இன்னைக்கு ரசம் சாப்பாடு வச்சிருக "
" உன் ஒரு ஆளுக்காக காலைல எந்திரிச்சு சாம்பார் , ரசம் , அப்பளம் வைக்க முடியுமா கண்ணு "
சரிம்மா அப்படின்னு சொல்லிடு சாபிட்டுவோம்
அய்யே சண்டே சிக்கன் இல்லையானு ஒருத்தன் கேட்பான் ஆமான்னு சொல்ல முடியாம
இல்லைன்னு சொல்ல முடியாம அந்த ரசம் சாப்பாடையே மொறச்சு பாத்துட்டு சாப்பிடுவோம்
சாயங்காலாம் வீட்டுக்கு போனதும் ரொம்ப டயர்டா இருக்கும்
ஒரு வாரத்தோட உழைப்பு நல்லா தூங்க சொல்லும் நல்லா தூங்கி எந்திரிசுட்டு
கொஞ்சம் சிக்கன சாப்ட்டுடு டீவி பாத்துகிட்டு இருக்கும் போதே தூங்கிடுவோம்
" மணி என்னனு பாரு எந்திரிச்சு தொலைடின்னு அம்மா கத்துவாங்க " இப்போ தானே தூங்கினேன்
அதுக்குள்ளே எந்திரிக்கவானு கடுப்பாகி வாட்சை பார்த்தல் அதிகாலை ஏழு மணி திங்கள்ன்னு காட்டும்
சரி விடுடா விடுடான்னு "கடவுள் இருக்கான் கொமாருனு " சொல்லிடு நம்ம வேலைய பாக்க போகணும்
இருந்தாலும் சண்டே வொர்க் பாவம் பாஸ் நாங்க

எழுதியவர் : க.நாகராணி (20-Nov-16, 12:59 pm)
சேர்த்தது : நாகராணி
Tanglish : sunday velai
பார்வை : 453

மேலே