ஹைக்கூ
1) ஒட்டிப் பிறந்த
ரெட்டைக் குழந்தைகள்...
ஒட்டாமலே...
உயிர் வாழ்கின்றன உலகில்......
"தாமரை இலையில் நீர்த்துளி"
2) ஆதவன்
நீர் அருந்தும் முன்
அவனையே...
விழுங்கி விட்டது...
இலையின் நீர்த்துளி......
3) சிறையிட்டதால்
ஏனோ?...
சிரித்துக் கொண்டே
எரித்து விட்டான் சூரியன்......
4) அவள்
விலகி விலகி ஓடினாலும்
வீழ்ந்திடாது தாங்குயென்று
ஒற்றைக் காலிலே நிற்கின்றது...
என் இதயம்......
5) அவள்
கட்டியணைத்து முத்தமிட்டாள்...
என் முகமெங்கும்
அவளின் முத்தத் துளிகள்......