வறுமையின் ஹைக்கூ

மழை துளி மேல்
மழை துளி சவாரி
பூமிக்கும் வரி

அடை மழை அழகு
குடை மழை சுமை
துள்ளும் வேகத்தில்
தள்ளி போகும் காவேரி
பல்குத்தும் பகுத்தறிவு
நெல் குத்தும் நெறியாளர்

உதட்டின் சுருக்கம்
அவர்களுக்கு...
வயிற்றின் சுருக்கம்
இவர்களுக்கு...

சிரிக்கும் குழந்தை
சில்லறை நொடிகள்
கருவறை காயம்
தெருவரை பக்தி
அடிமை அனி வேர்
ஆளுமை நுனி புள்
கேடயம் வாங்கா நடிகர்கள்

மறைமுக நாவல்
நேர்பட கவிதை
தென்படாத இலக்கியம்
இறந்த ரகசியம்
"சகித்து இரு"
வறுமையின் ஹைக்கூ

-ஐ-

எழுதியவர் : -ஐ- (24-Nov-16, 1:18 am)
சேர்த்தது : ஐயெழுத்து
Tanglish : varumaiyin haikkoo
பார்வை : 626

மேலே