சும்மா படிங்க 5

நான் ஒரு நடுத்தர வர்கத்தை சார்ந்தவன் ...
எந்த கட்சியையும் சாராதவன்..
நாட்டின் மீதும், நாட்டின் முன்னேற்றத்தின் மீதும், அடுத்த தலை முறையின் மீதும் எனக்கு சிறிது கவலை உண்டு ....
நாட்டில் ஊழல் அதிகரித்துக்கொண்டே போகிறது...
நேர்மையாக இருப்பவர்கள் ஏமாளிகளாக கோழைகளாக பார்க்க படுகிறார்கள்..
அரசியல்வாதிகள் , முறையற்ற ரியல் எஸ்டேட் தரகர்கள், வியாபார கொள்ளையர்கள் அனைவரும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது ...
விவசாயிகள், நேர்மையாக மனசாட்சிக்கு உட்பட்டு எளிமையான வாழும் பொதுமக்கள் ... பயத்தோடும் விரக்தியோடும் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்...
நாட்டிற்கு எதிராக பேசுபவர்கள் ஹீரோக்களாக பார்க்கப்படுகிறார்கள்....நாட்டுப்பற்று உள்ளவர்கள் காமெடியன்களாக பார்க்கப்படுகிறார்கள்...
எதிர்கால சந்ததியினரிடம் நாட்டின் மீதோ , நம் நாட்டிற்க்காக உழைத்தவர்கம் மீதோ அல்லது உயிர் நீத்தவர்கள் மீதோ எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் ஈடுபாடும் இல்லாமல் இருந்ததது...
என் தேசம் உலக அரங்கில் ஒரு மூன்றாம் தர நாடாகவே இருக்கிறது ....
நம் நாடு ஏன் இப்படி இருக்கிறது என்ற கவலை என் மனதில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருந்தது...
இவை அனைத்தும் திரு. மோடி அவர்கள் பிரதமர் பதிவியேற்றப்பிறகும் இருந்த்தது….
ஆனால் அவர் கடந்த வாரம் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு …
என் கவலைகள் ஆதங்கங்கள் அனைத்தையும் நீக்கி விட்டது..
அது. நடுத்தர எளிமையான நேர்மையான விவசாயிகளுக்கும், உழைப்பவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
தவறானவர்களுக்குள் ஒர் கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
உலக நாடுகள் நம்மை திரும்பி பார்க்கின்றன…
கடந்த காலங்களில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் எனது இந்தியா உலகத்திற்கான தலைவர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை முளைத்திருக்கிறது.
வாழ்க பாரதம்.

எழுதியவர் : சூரியகாந்தி (25-Nov-16, 12:01 pm)
பார்வை : 99

மேலே