மூன்றெழுத்து
கருவில் சுமக்கும் அம்மா மூன்றெழுத்து
காலமெல்லாம் சுமக்கும் அப்பா மூன்றெழுத்து
உடன்பிறப்புகளின் உறவு மூன்றெழுத்து
உடன்பிறவா உறவாக நட்பு மூன்றெழுத்து
பள்ளியில் பயிலும் கல்வி மூன்றெழுத்து
கல்வியில் சிறக்க தேர்வு மூன்றெழுத்து
அதன் மூலம் கிடைக்கும் அறிவு மூன்றெழுத்து
அறிவை கொண்டிருக்கும் மனம் மூன்றெழுத்து
மனதில் இருக்கும் சக்தி மூன்றெழுத்து
பருவத்தில் மலரும் காதல் மூன்றெழுத்து
காதலின் முதிர்ச்சி காமம் மூன்றெழுத்து
அதன் வரமாக மழலை மூன்றெழுத்து
மழலையின் முதல் ஒலி அழுகை மூன்றெழுத்து
அதிலும் இருக்கும் அழகு மூன்றெழுத்து
அழகில் சிறந்த தமிழ் மூன்றெழுத்து
தமிழில் எழுதப்பட்ட கவிதை மூன்றெழுத்து
கவிதையை ரசித்துப் படித்த உங்களுக்கு நன்றி மூன்றெழுத்து