துறவென்பது

உறவின் நிலையறிந்து,
வாழ்வின்
உண்மைப் பொருள் தெரிந்து
துறவு துளிர்க்கவேண்டும்,
அது
தூயதாய் இருக்கவேண்டும்..

அறியாத சிறுவயதில்
பிள்ளைகள் தலையில்,
அறியாமையால் ஏற்றும்
துறவுச் சுமை
தருவதில்லை பயனெதுவுமே..

அது
அவர்களுக்கு ஒரு
வேடிக்கை விளையாட்டே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Dec-16, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 45

மேலே