ஆகினை தொட்டு

ஆகினை தொட்டு
ஆறு நிலை தாண்டி
அமைதி அனுபவிக்க
ஆயிரம் எடுத்துச் சொல்லியும்
செவிமடுக்கவில்லை

பாதுகாப்பில்லை
எனப் பிறரைக்
குறை சொல்லிப்
பொருள்தேடித் தோற்பதே
வாடிக்கை

கையில் வெண்ணையைக்
கொண்டு நெய்க்கு அலைவதுதான்
தனித்திறமை எனக்
கவுரவிக்கப்பட

வள்ளுவ மாமுனியே
தெரிந்துகொள்ளுங்கள்
'அகர முதல எழுத்தெல்லாம்...'
மேடையேறி ஒப்பித்துப்
பாராட்டுப் பரிசு
பெறுதற்கு மட்டுமே

#மணிமீ
26 - ஜூன் - 16

எழுதியவர் : மீ.மணிகண்டன் (3-Dec-16, 9:28 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 74

மேலே