பிறப்பு எதற்கு
கட்டளைக் கலித்துறை
இங்கெவன் செத்தால் இருந்தால் திரிந்தால் எனக்குமென்ன ?
எங்கெவன் எப்படிப் போயினும் என்னென்" றிருப்பவர்காள் !
உங்களை அந்த வுயர்ந்தவன் மண்ணில் உயிர்ததுவோ
அங்கை விரிந்திரப் போர்க்கு முதவி அளப்பதற்கே !
-விவேக்பாரதி