என்னை விட்டு போகாதடா

ஏய்...சப்தி புரிஞ்சிக்கோ!... டி

நமக்குள்ள இந்த லவ் செட் ஆகாது...
விட்றலாம்...

உன் கேரக்டர் வேற என்னோட கேரக்டர் வேற...

நான் அம்மா அப்பானு Family ah வளந்தவன்...
நீ அநாதையா வளர்ந்தவள்...

உன் ஜாதி வேற என் ஜாதி வேற...

இது எதுவுமே தெரியாம childish ah லவ் பண்ணிட்டோம்...இப்ப தான் realize பண்றேன்...

எங்க வீட்ல சம்மதம் வாங்குறது ரொம்ப கஷ்டம்...இதுல உனக்கு கேன்சர் வேற...
என்றேன் நக்கலாக...

என்னை ஒரு ஏமாற்றத்தோடு அவள் பார்த்திருக்க கண்ணீர் மட்டும் தாரையை தாரையாய் கொட்டியது...
அவளுக்கு...

சிறு நேர மௌனத்தில் அவள் அழு குரலில் சரி விட்றலாம் என்றாள்...

இதை எதிர்பார்க்க வில்லை இருந்தும் மகிழ்ச்சிதான்...என எழுந்து நடக்க ஆரம்பிக்க...

என் கையை பிடித்தாள்...நான் என்ன என நக்கலாக கேட்க...

plz டா என்ன விட்டு போகாத...எனக்குனு யாரு இருக்க உன்ன தவிர என்று அழுதிட்டாள்...

நான் கண்டு கொள்ளாமல் கையை தட்டி விட்டு நடக்க...

திடீரென காலில் விழுந்திட்டாள்...plz டா என்ன விட்டு போகாத...நிஜமா எனக்கு கேன்சர் Stage D வந்திடுச்சி...இன்னும் ஆறு மாதம் தான் இருப்பேன் டா...அதுவரைக்கும் கூட இரு என்றாள்...

எனக்கு அவள் இவ்வளவு அழுதும் இரக்கம் தோன்றவில்லை என்றல்ல... தோன்றியதால் தான் கையை தட்டி விட்டு நடந்தேன் டா...

பாவம் டா அவ என்ன ரொம்ப நம்புனா நான் தான் அவளை ஏமாத்திட்டேன்...

அவ பக்கத்துல இருக்கும் போதெல்லாம் எதுவும் தோனல டா...இப்ப அவ எங்க பாத்தாலும் இருக்குற மாரி இருக்கு...

முதன் முதல்ல பஸ் ல வச்சி தான் அவளை பார்த்தேன் டா...தேவதை மாறி இருந்தா டா என உளறி கொண்டிருக்க...

இது நடந்து எவ்வளவு நாள் இருக்கும் என்றான்...

3 மாதம் இருக்கும் டா...என்றேன்...

இப்போ அவ உயிரோடு தான இருக்காள் என்றான்...

I think so என்றேன்...

எப்படி உயிரோடு இருக்கானு சொல்லுற...என்றான்

நான் சரோன் தெரியும் ல என சொல்ல போக...

அந்த வெள்ள தக்காளிக்கா என்றான் குறுக்கே...

நான் முறைக்க சொல்லு சொல்லு என்றான்

அவளுக்கு கால் பண்ணேன் டா...unknown நம்பர்னு உடனே எடுத்திட்டா...

நான் சப்தி இருக்காளானு கேட்டதும் கட் பண்ணிட்டா...
But அவ கட் பண்றதுகுள்ள ஒரு குரல் கேட்டிச்சி அது சப்தி யோடதுதான் கன்பார்ம் தெரியும் என்றேன்...

இப்ப அவளை பாக்கனும் போல இருக்கு இந்த இரண்டு மாசமா தேடுறேன் அவள் எங்க இருக்கானு கூட தெரியல...என்றேன்

அட நாயே...நாம போலிஸ் எஸ் ஐ டா... நம்மலால கண்டு பிடிக்க முடியலனா யாராலையும் முடியாது...

நம்ம முத்து அண்ணேன் கிட்ட கேளு டா அவரு தான் போன் நம்பரை வச்சி Trace பண்ணி சொல்ல போறாரு என்றான்...

அட ஆமல...என்றதும் காத்திருக்க தோனவில்லை...

என் நண்பனை நைட்னு கூட பாராமல் Police station கூட்டு சென்று இப்பவே சொல்லு என்றேன்...

அவனும் Trace செய்ய கன்னியாகுமரி
பறக்கை
என்று ஒரு வீட்டு அட்ரஸ் காட்டியது...
அப்பவே பைக்கில் கிளம்ப போக...

இந்த நைட்ல யா டா போற...என்று சொல்லி சிறு நேர யோசணையில்...

இவ்வளவு வெறி இருக்குல...அவ மேல...அப்புறம் ஏன் டா அவள விட்டு போன...என்றான்...

மச்சா அது சொன்னா புரியாது டா....

5வருசமா அவ தான் உன் லைவ் அவ தான் உன் உயிர் அவ உனக்கு எல்லாமேனு வாழ்ந்திட்டு இருக்க...

திடீர் னு வந்து எனக்கு கேன்சர் டா...இன்னும் Six month தான் உயிரோடு இருப்பேனு சொன்னா எப்படி இருக்குனும் தெரியுமா... அவள அப்படியே புடிச்சி சப்பு சப்பு சப்பு னு அறையனும் போல இருக்கும் டா...

அவள் சாகுறத என்னால பார்க்க முடியாது மச்சா...அதான் அவ உயிரோடு இருக்குறதா நினைச்சி எங்கேயோ வாழ்ந்திடலாம் னு நினைச்சேன் டா... ஆன அது தப்பு டா நான் தான் அவ கூட கடைசிவரை இருக்கனும் என்றேன்...

நான் இப்படி பேசுவேனு அவன் நினைத்திருக்க மாட்டான்...
மச்சா எல்லா நல்லதுதான் நடக்கும் All the best என்றான்...

ம்ம்ம்ம்ம் என்று அங்கிருந்து என் தேவதையை பார்க்க கிளம்பினேன்

இனி சப்தி தொடர்வாள்...

எனக்கு பிடித்த அழகான ரோஜாவை பார்த்திருந்தேன்...

ரோஜா என்னவோ சிகப்பு தான் ஆனால் என்னவோ என் கண்ணுக்கு மஞ்சளாய் தெரிகிறது...

எதனால் அப்படி என்கிறீர்களா?

எனக்கு கல்லீரல் புற்று நோய்...

மஞ்சள் பூத்த கண்கள்.
உச்சி முதல் பாதம் வரை கடுமையான வலி.
பத்து நிமிடம் விட்டு விட்டு வலது விலா எலும்பில் வலி.

இவ்வாறு என் உடலையும் என் காதலையும் சிதைத்திருந்தது அந்த புற்று நோய்...

என்னை பல சொத்துக்கு சொந்தகாரி என்பார்கள்...எது உண்மையான சொத்து என புரியாதவர்கள்...நட்பையும் காதலையும் தவிர வேற சொந்தம் என்னிடம் இல்லை

இப்போது என் காதலும் என்னிடம் இல்லை...
அழகாய் இருக்கும் போது காதலித்தவன் புற்று நோய் என்றதும் விட்டு சென்றான்...

இப்போது எனக்கு துணையாய் இருப்பது என் தோழி சரோன் மட்டுமே...

அவள் ஒரு புற்று நோய் மருத்துவர்...நான் இன்னும் 45 நாள் மட்டும் தான் உயிரோடு இருப்பேனாம்...
என் தோழி சொன்னது...இப்போது என் நினைவில் இருப்பது என் காதல் மட்டுமே...

ஆனால் நிஜத்தில் இல்லை

பின்னாலிருந்து ஒரு குரல் என் தோழி சரோன் உடையது...
மாத்திரை சாப்பிட்டியா?

இல்லை என தலை அசைக்க

ஒரு கொடுரமான முறையில் முறைத்து விட்டு மாத்திரையை நிட்டினாள்...
சாப்பிடு மச்சி எல்லாம் சரி ஆகும் என்றாள்...

என் கண்ணிலிருந்து கண்ணீர் தாரையை தாரையாய் கொட்டியது...
ஏன் டி அழுவுர என அவள் வினாவ

உனக்கு நியாபகம் இருக்கா ஒன் டைம் எனக்கு பிவர் வந்து ல அப்போ நான் மாத்திரை சாப்பிட மாட்டேன் அடம்பிடிச்சேன் ல அதுக்காக
நவின் சாப்பிடாம கூட இருந்தான் நியாயம் இருக்க...

அவ்வளவு பாசம் வச்சவான் எப்படி டி என்ன விட்டு போலாம் என்று கதறினேன்...

அவன் நான் சாகுர வர கூட இருப்பானு நினைச்சேன்...இப்படி பாதில போய்டானே என்று மனதில் அழ நிஜத்திலும் அழுதேன்...

உனக்கு பைத்தியமா டி நீ உடம்பு சரி இல்லாத பொண்ணு இப்படி கண்ட கண்ட தெல்லாம் யோசிக்காத...

அவன் ஒரு பிராடு டி உன்ன லவ் பண்ணல உன் பணத்தையும் உடம்பையும் தான் லவ் பண்ணி இருக்கான் என்றாள்...

அதுவும் உண்மை தானே என்றது முளை அதை நம்ப மறுத்தது இதயம்...நான் மூளைக்கும் இதயத்திற்கும் சண்டை போட்டிருக்க...

சரோன் மொபைல் ரிங் ஆனது...

(நவின் தான் கால் செய்திருந்தான்)

நான் யாரென வினாவ சரோன் ராங் நம்பர் என கட் செய்தாள்...

நான் நவின் என ஏமாந்திருந்தேன்...

அடுத்தநாள் காலை

நவினின் நினைவாக அவன் முதன் முதலில் கொடுத்த லெட்டரை படிக்க அரம்பித்திருந்தாள்...பலமுறை படித்தது தான்...என்னதான் பல முறை படித்தாலும் அவளுக்கு கஷ்டமாய் இருக்கும்போது அதைதான் படிப்பாள்...

படித்திருக்க...

அவளை அறியாமலே கண்ணீர் சொட்ட கண்ணிர் மஞ்சளாய் மாறியது...

ஓவென அழ ஆரம்பித்திருந்தாள்...

(என்று அவளுக்கு மஞ்சள் நிற கண்ணீர் வருகிறதோ...அற்றிலிருந்து 1 வாரத்தில் அவள் இறந்தாடுவாள் என அவள் தோழி சொன்னது)

சேரோன் ஏன் என வினாவ...

அவள் வெள்ளே நிற சுடிதாரில் முகம் புதைத்து
அழுதிருந்தாள்...
அவள் முகத்தை விலக்கிப் பார்க்க அதில் மஞ்சள் திட்டு திட்டாய் இருந்தது...

ஏய் நான் சீக்கிறம் செத்திடுவேன் நிஜமா நான் சாகுர நாள் கிட்ட வந்திடிச்சி...

எனக்கு நவினை பாக்கனும்...

பிலிஸ் டி நவினை லாஸ்ட் ஒரு வாட்டி பாத்திட்டு செத்து பொய்டுறேன் என
தேம்பி தேம்பி அழ...

வாசலில் ஒரு குரல்...

சரோன் வீடு தானே என்ற குரல்...

அது நவின் குரல் தான்...என் அழு சத்தம் கேட்டு அவன் வீட்டிற்குள் வர...

அவனை பார்த்த ஆனந்தத்தில்... ஆனால் பெண்ணிற்கே உரிய
ஆவேசத்தில்...

நீ ஏன் டா இங்க வந்த
என்ன நிம்மதியா இருக்க விட மாட்டியா...

என்ன சாகும் போது கூட நிம்மதாயா இருக்க விட மாட்டியா...என முடியாமல் கத்திட்டிருந்தேன்...

என்னை என் தோழி ஓரக்கண்ணால் முறைத்தால்...

நேராக அவன் என் அருகில் வந்தான்...

என் கருவிழியும் அவன் கரு விழியும் ஒரு சேர நிற்க...
இன்னும் நெருங்கி வந்தான்
I trust U so I love U என்றான்...

இது தான் நான் காதலித்து அவனிடம் முதலில் பேசிய வார்த்தை
எனக்கு அது பிடித்திருந்தாலும் பிடிக்காதவாறு தலையை திருப்ப எத்தனிக்க முடியாமல் அவன் மார்பில் சாய்ந்தேன்...இன்னும் 7 நாள் தான் நான் உயிரோடு இருப்பேன் எனும் பட்சத்தில் நான் அவனிடம் பெரிதாய் சண்டை போட வில்லை...இதற்கு அவன் மேல் இருக்கும் நம்பிக்கை குறைந்தது கூட ஒரு காரணம்...
அவன் நடந்ததை சொன்னான் மன்னிப்பு கேட்டான் நான் ஏற்றுக்கொண்டேன்...

அவனிடம் அவன் காதலியாய் என்னை மிகவும் ஈர்ப்பது அவன் கண்கள்...

ஈர்ப்பைதடுப்பது அவன் கண்ணாடி...
எனக்கு என் நவினிடம் பிடித்தது...அவன் நினைப்பதை என்னை செய்ய வைத்திடுவான்...

அவன் வந்த இரண்டு நாளில் என் தோட்டம் முழுவதும் ரோஜாக்களால் நிரப்பினான்...

என்னையும் அவன் காதலால் நிரப்பினான்...

இப்படியே ஒருவாரம் கழிய
எனக்கு சாவைப்பற்றி பயம் துளியும் இல்லை...அவன் வந்ததில் இருந்து...எனக்கு உடலிலும் மனதிலும் வலி அவ்வளவாய் இல்லை...மஞ்சள் பார்வை கூட மாறியது...

கேன்சருக்கும் காதல் கேட்கும் போல நினைத்துக்கொண்டேன்...

இதை அவனிடம் சொல்ல அவன் என்னை அனைத்து முத்தமிட்டு உன் தோழி சேரோனிடம் இதை சொல்லாதே என்று ஒரு துப்பாக்கியை கையில் கொடுத்தான்...

நான் குழப்பமாக பார்த்து விட்டு ம்ம்ம்ம்ம் என தலை ஆட்டினேன்...

நான் தான் சொன்னேன் ல அவன் நினைப்பதை என்னை செய்ய வைத்திடுவான் அவன் என்று...

3 வாரம் கழிந்திருக்கும் என் உடல் நலம் நன்றாக தேரியது...

நாங்கள் காதல் செய்த இந்த ஐந்து வருடத்தில்
இன்று தான் அவனை பார்த்து இரண்டாவது முறை I Trust U So I Love U என சொல்ல தோன்றியது...

அதை அவனிடம் சொல்ல போகா...வயற்றில் பயங்கர வலி...மூக்கில் இருந்து இரத்தம்...இன்று தான் கடைசி நான் போல பயத்தால் நவின் என கத்தினேன்...

திபுதிபு என ஓடி வந்தான்...என்னை குண்டு கட்டாக தூக்கி கட்டிலில் கடத்த...ambulance வந்தது
என் தோழி அழைத்திருப்பாள்...போல

என்னை நவின் தூக்கி ambulance ல் கிடத்தி விட்டு ஒரு நிமிடம் காத்திருக்க சொல்லி ஓடினான்...

திரும்பி வந்தவன் என் நெத்தியில் பொட்டு வைத்தான்...நீ வா என கூப்பிட்டேன்...
நீ வீட்டிற்கு நல்லபடியா திரும்பி வா நான் வெயிட் பண்றேன் என்றான்...

ஆம்பிலன்ஸ் கிளம்பியது... 15 நிமிடம் இருக்கும்...அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் வந்துவிட்டதா என எண்ணி படுத்திருக்க...

கதவை திறந்து ஒரு தடியன் என் காலை பிடித்து வெளியே தூக்கி எறிந்தான்...

நான் தெரித்து விழுந்தேன் கிழே
ஒரு காடு போல இருந்தது

நான் என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் பார்க்க என் தோழி மற்றும் அவள் காதலன் ரமேஷ் நின்றிருந்தனர்...

என்ன என கண்களால் வினாவ அந்த தடியன் என் வயிற்றில் ஓங்கி மிதித்தான்...

நான் வலி தாங்காமல் சரோனை பார்க்க

அவள் ஏன் டி நாயே நீ சாகவே மாட்டியா...நீ சாகுரதுக்கு எவ்வளவு காஸ்ட்லியான மருந்து தந்தேன் தெரியுமா...செத்து தொலைக்க வேண்டியதுதான என்னும் எவ்வளவு செலவு பண்ணுறது என்றாள்...

ஏன் டி இப்படி பேசுற...நான் உன் பெஸ்ட் பிரண்ட் தான என்றேன்...வலியில்

நீ பைத்தியமா இல்ல பைத்தியம் மாறி நடிக்கிறீயா சப்தி...என்றாள் சரோன்

நான் புரியாமல் விழிக்க...
உனக்கு கேன்சர் ல இல்ல...சாதரண வயித்த வலிதான்...நான் தான் உனக்கு கல்லிரலை பாதிக்கும் மாத்திரை கொடுத்தேன் என்றாள் கொடூர சிரிப்பில்

அப்போ எனக்கு கேன்சர் இல்லையா...என மனதில் சந்தோஷா பட்டு விட்டு...ஏன் அப்படி செஞ்ச என அவளிடம் கேட்க...

இப்ப கூட ஏன்னு தெரியல ல...

நிஜமா நீ லூசு தான்...எல்லாம் உன் சொத்துக்கு தான் என்று அவள் பங்கிற்கு வயிற்றில் ஒரு மிதி விட்டாள்...

இன்னும் ஒரு மிதி விட்டால் அங்கேயே...செத்திருப்பேன் வலியில்...

Plz டி நான் என் சொத்தெல்லாம் எழுதி வச்சிடுறேன் என்ன விட்டுரு நானும் நவினும் வேற எங்கயாது போய் வாழ்ந்துக்கிறோம்

எனக்கு வருத்தம் ல இல்ல கேன்சர் இல்ல னு சந்தோசம் தான் மனசு புல்லா இருக்கு என்று கெஞ்ச

அட குழந்தை டி நீ உன் சொத்து எங்க பேர்ல தா இருக்கு அதை எப்பவோ எங்க பேருக்கு மாத்திட்டோம்...ஆன நீ செத்தா தான் செல்லும் என துப்பாக்கியை என்னை நோக்கி நீட்டினாள் என் தோழி
துப்பாக்கி சத்தம் கேட்டது...

நான் பயத்தில் கண்ணை மூடி திறக்க... அந்த தடியன் கிழே விழுந்தான்...

ஆச்சிரியத்தில் திரும்பி பார்த்தனர்
நவின் நின்றிருந்தான்...

எனக்கு அவன் மேல் காதல் வர ஒரு காரணம்

நக்கலான நடையும் பேச்சும்...

அதில் அதீத நக்கலும் அகங்காரமும் இருக்கும்...

ஆதே பாணியில் நவின் நடந்து கொண்டே

ஏன் டா ரமேஷ் பொட்டச்சி துப்பாக்கி வச்சிருக்கா...நீ பொட்ட மாரி சும்மா நிக்கிற என்றான்...
இதை கேட்டதும் ரமேஷும் பதிலுக்கு தூப்பாக்கியை நீட்ட...

அப்போ இரண்டு பேரும் துப்பாக்கி வச்சி இருக்கீங்க தான என கையை தூக்கி விட்டு நடந்து கொண்டே...
நீங்க சுட தேவையெல்லாம் இல்லை...நானும் அவளை பணத்துக்காக தான் லவ் பண்றேன் என்றான்...

நான் அதிர்ச்சியில் உறைந்து பார்க்க...

அவன் அதே நக்கல் பேச்சில் நீங்க அவ சொத்துல 75 கோடி வச்சிடுங்க...என
க்கு 25 கோடி போதும் என்றான்...

அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க...

K என்றனர்...

அப்புறம் என்ன இவளை கொன்னுடலாமே என துப்பாக்கியை என்னை நோக்கி நீட்டினாள் சரோன்...

அதற்கு நவன் அவளை பாரு லட்டு மாரி இருக்கா அது பன்னிட்டு கொண்ணுடலாமே என எண்ணைப்பார்த்து கண்ணடித்தான்...

அதற்கு சேரோன் அயிரம் தான் இருந்தாலும் அவள் என் தோழி அதெல்லாம் முடியாது...என்றாள்

ஓஓஓஓஓ நட்பா என நக்கல் சிரிப்பில்
ஓரே ஓரு கிஸ் மட்டும் என என்னை நெருங்கி வர

நான் என் உதட்டை வாயால் மூடிக்கொண்டேன்...
அருகில் வந்து பளார் என்று அறைந்தான் என் பாதி பல் கொட்டி விடும் அளவிற்கு வலித்தது...இருந்தாலும் உதட்டை திறக்க வில்லை
அவன் கருவிழியை என் கருவிழியின் அருகில் வைத்தான்....
என்னை அறியாமலே என் உதடு திறந்தது...
அவன் இன்னும் நெருங்கி வர கண்ணை மூடிக்கொண்டேன்...

இரண்டு துப்பாக்கி சத்தம் சரோனையும் ரமேஷையும் சுட்டு விட்டான்...
விட்டான் இல்லை விட்டார்கள்

தூரத்தில் இருவர் நடந்து வந்தனர்...நவின் நண்பர்கள் என நினைக்கிறேன்...

இது நடந்து அவன் இன்னொரு நண்பன் வரும் வரை அங்கு காத்திருந்தோம்...

என்ன காப்பாத்த தான வந்த நான் ஆபத்துல இருக்குறது உனக்கு எப்படி தெரியும் என்றேன்...

எனக்கு ஆரம்பத்துலஇருந்தே ஒரு டவுட் உன் பிரண்டு மேல...அதான் அவ கொடுத்த மாத்திரையை கூட மாத்தி வச்சிட்டேன்...அதான் நான் வந்த அப்புறம் உனக்கு உடம்பு நார்மல் ஆச்சி தெரியுமா என்றான்...
ஓ என ஆச்சர்ய பட...

இப்ப நான் ஆபத்துல இருப்பது எப்படி தெரியும் என்றேன்...

அவன் நெத்தியை பார்த்தான்...

நான் சிறிது நேர ஆச்சரியத்தில் பொட்டை தொட்டு பார்த்து இது கேமிராவா என்றேன்...

ஆம் என தலை அசைத்தான்...
அவன் நண்பன் வந்தான்...அவனிடம் ஏதேதொ பேசி விட்டு
என்னை பைக்கில் கூட்டி சென்றான்...
நீ ஏன் என்ன கன்னத்துல அடிச்ச என்றேன்...

அட லூசு நான் தான் உன் கிட்ட ஒரு துப்பாக்கி கொடுத்தேல அதை எடுத்து சுட்டு இருக்கலாம் ல...நான் கண் அடிச்சி கூட நியாபக படுத்துனேல...நீ எடுக்கல அதுக்குதான் லூசு அடித்தேன் என்றான்...அட ஆம ல என்று வழிந்தேன்...

எழுதியவர் : நவின் (6-Dec-16, 10:49 am)
சேர்த்தது : நவின்
பார்வை : 882

மேலே