இல்லைஇல்லை

நிமிர்ந்து சென்றால் தான்
கம்பீரமென்றில்லை...

தலைதாழ்த்திப்பேசினால்
தாழ்வுமனப்பான்மையென்றுமில்லை...!

வளைந்து போகாத
நதிகள் இல்லை............

வலிகள் இல்லாமல்
வாழ்க்கை இல்லை.....!

வாழ்த்துக்கள் எல்லாமும்
உண்மையுமில்லை....

வருந்துபவரெல்லாமும்
நண்பரென்றில்லை....!

காதல் வருவது
ஆண்களுக்கு மட்டும்தான் என்றில்லை....

காமத்தில் சேராமல்
காதல் என்றும் இனித்திருப்பதில்லை.....!

எழுதியவர் : செல்வமணி (8-Dec-16, 9:40 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 414

மேலே