காசில்லா வாழ்க்கை வேஸ்ட்

தேடி தேடி கிடைக்கல
ஓடி ஓடி முடியல
தேடி ஓட தேடி ஓட
தேடல் தொடருதே

காசுதானே வாழ்க்கையினு
மனசு துடிக்குதே
காதல் கூட காசுக்காக
இங்கு நடிக்குதே

பாசம் இங்கு நிசமில்ல
வேஷம் இங்கு புதுசில்ல
பணத்தை பார்த்த பொணமும் கூட
வாயை திறக்குதே
ஜனத்த மாத்தும் வசியம்
இந்த பணத்தில் இருக்குதே

காசிருந்த கேசில்ல
காசில்லாட்டி பாஸ் இல்ல
லூசுக்கூட தலைவனாகும்
வாய்ப்பு உண்டு நாட்டில

வழுக்கை தலையில் முடி முளைக்க
செஞ்ச தப்ப மூடி மறைக்க
காச நாம தேடி பிடிக்க
வாழ்க்கை தொலையுதே

தேடி தேடி நானும் ஓட
சுவாசம் குறையுதே
காசில்லா வாழ்க்கை வேஸ்ட்
நமக்கு தோணுதே ....

எழுதியவர் : ருத்ரன் (8-Dec-16, 8:58 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 136

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே