கண்ணில் ஏன் கவிதை

கண்ணில் ஏன்
கவிதை எழுதி
காதலை சொன்னாய்?

அந்தக்காதலை
ரசித்துச்சொல்ல
என்னை கவிஞனாக்கினாய்?

கவிதை வெறும் கதையானதால்
என் திசை உனக்கேன்
எதிர்த்திசையானது?

இன்று கவிழ்ந்து கிடக்கிறேன்,
காதலை விடமுடியாமல்.

உழன்று தவிக்கிறேன்,
கவிதையையும் விட முடியாமல்.

காதல் உதிக்கையில்
அழகிய ரோஜாவாக இருந்தது - இன்றோ
அதுவே மோனாலிசா ஓவியமானது.!

உன் முகமும் என் முகமும்
உதிர்ப்பது இன்று
ஒரு வெற்றுப்புன்னகை - அதில்
ஊனுமில்லை, உயிருமில்லை.!

காதல் நமக்கு
இளநீராய் இனித்தது அன்று,
கவிதை கிடக்கிறது இன்றும்
அந்த இளநீர் மட்டையாய்....!

எழுதியவர் : செல்வமணி (9-Dec-16, 9:10 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kannil aen kavithai
பார்வை : 253
மேலே