புயல்

பூங்காற்று இன்று புயலாக வீசுதே...
பூமரங்கள் விதவைக் கோலம் பூணுதே...
வேறுசில வேரோடு மண்ணில் சாய்ந்ததே...
வேய்ங்குழல் தெறித்து முகாரி கேட்கிறதே......


மூச்சுக் காற்றாய் வந்த தென்றலே...
மூச்சுக் குழல் கிழித்துப் போகலாமா?...
சந்தோசம் நிறைந்து வாழ்ந்து வந்தோரை
சத்தமிட்டு அழுதிட வைப்பது நியாயமா?......


நெருப்பைத் தெளிக்க நீயிங்கு வந்திருந்தால்
நீரூற்றும் கண்களில் நின்னை அணைத்திருப்போம்...
மழையாய் வந்திருந்தால் குடைகள் பிடித்திருப்போம்...
வேகமாய் வந்து வேதனையைத் தந்தாயே......


வேய்ந்த குடிசைகள் எங்கோ?... கிடக்குது...
ஓட்டு வீட்டுக்குள் சூரியன் சிரிக்குது...
ஆடு மாடுகள் அலறித் துடிக்கிறது...
நீகடந்து சென்றிட அமைதி நகைக்கிறது...


புயலே புவியை வந்து தாக்கினாய்...
கண்ணீரைத் தண்ணீராய் நீ பருகினாய்...
ஒருநாள் பொழுதில் அனைத்தையு மிழந்து
தனிமையின் கொடுமையில் தத்தளிக்க விட்டாயே......

எழுதியவர் : இதயம் விஜய் (10-Dec-16, 11:51 am)
Tanglish : puyal
பார்வை : 1369

மேலே