மர்ம தேசம்

எங்கோ கதைகளில்
மட்டுமே படித்தது
மர்மதேசத்தை பற்றி

ஆனால் இப்பொழுது
கண்முன்னே

அம்மா அம்மா என்றவர்கள்
அனைவரும்

சின்னம்மா சின்னம்மா
என்கிறார்கள்

அம்மா புதைந்த
மண்ணின் ஈரம் கூட
காயும் முன்
அடுத்த அம்மாவை உருவாக்க
தவியாய் தவிக்கிறார்கள்

சாதரண காய்ச்சல்
என்றார்கள்

நோய் தொற்று
என்றார்கள்

இரண்டு நாளில் வீடு திரும்புவார்கள்
என்றார்கள்

சில நாள் ஓய்வு
என்றார்கள்

இட்லி சாப்பிடுகிறார்
என்றார்கள்

உப்பில்லை என்று திட்டினார்
என்றார்கள்

பிசியோ தெரபி
என்றார்கள்

லண்டன் மருத்துவர்
என்றார்கள்

தில்லி மருத்துவர்கள
என்றார்கள்

சுவாசகுழாய் பொருத்தியிருக்கிறோம்
பேச இயலாது
என்றார்கள்

எழுத இயலாது
அதனால் கைரேகை
என்றார்கள்

கைபட எழுதிய அறிக்கை
என்றார்கள்

நடக்கிறார், தொலைகாட்சி பார்க்கிறார்
பேப்பர் படிக்கிறார்,
என்றார்கள்

பார்க்க சென்றவர்கள் யாவரும்
பார்த்தவர்களை பார்த்தேன்
என்றார்கள்

இதிகாசமாய் நீண்ட
கடைசி இரு பக்கத்தின்
முதல் பக்கத்தில்

மாரடைப்பு என்றார்கள்
நுரையீரல், இதயம்
இயங்கவில்லை
என்றார்கள்

கடைசி பக்கத்தின்
முதலில்

மிகவும் கவலைக்கிடம்
என்றார்கள்

பாதி பக்கம் கடந்ததும்
மறைந்தார் என்றார்கள்

சில நிமிடங்களில்
முற்று புள்ளிக்கு பக்கத்தில்
இன்னொரு புள்ளி வைத்து

இன்னமும் சிகிச்சை
என்றார்கள்

கடைசி வரியில்
காலமானார் என்றார்கள்

ஆனால் யாருமே
காரணத்தை மட்டுமே
சொல்ல வில்லை

தனியார் தொலைகாட்சி
தலைமையாசிரியர்

மிகவும் நம்பக தன்மையுள்ள
இடத்தில் இருந்து
வருவதாய் சொன்ன
அனைத்து தகவலுமே
உறுதியானது

ஆனால் மரண தகவலை தவிர
அந்த நம்பக தன்மையுள்ள
அந்த நபர் யார்
என்பது மட்டுமே
?????

அதை விட கொடுமை
இன்னொரு தொலைகாட்சி

கடைசியாய் வாழ்ந்த இடமென்று
நடந்த இடமென்று
உடற்பயிற்சி செய்த இடமென்று
கடைசி மூச்சு விட்ட இடமென்று
எதை எதை காட்டுகிறார்கள்

ஒரு பத்து நாளுக்கு
முன்பாவது இப்படி
காட்டி இருந்தால்
உயிருடன் இருந்த
கடைசி நாட்களில்
முதல்வரை கண்டு
ஆறுதல் அடைந்திருப்போம்

இவையெல்லாம் கடந்து

ஒரு மாலை நாளிதழ்

மருத்துவ மனையில்
நர்சுகளிடமெல்லாம்
என்னவென்ன பேசினார்கள்

சிரித்தார்கள்,
என்னவேண்டும் கேள்
உடனே செய்கிறேன்
என்றார்கள்

இப்படி அவர்களின்
கற்பனையை கட்டவிழ்க்கிறார்கள்

இந்த மர்ம தேசத்தின்
முதல் அத்தியாயம் வரையில்
விதி என்று எடுத்தாலும்

இப்பொழுது நடக்கும்
கதை சொல்லிகளின்
கற்பனைக்கு காரணம்
என்ன வென்பது
அந்த கடவுளுக்கே
வெளிச்சம்

எழுதியவர் : ந.சத்யா (10-Dec-16, 7:46 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : marma dhesam
பார்வை : 60

மேலே