தமிழ்
குறள் வெண்பாக்கள் :
அன்பின் வழிமலரும் அன்னைத்த மிழ்மொழியே
நின்னை வணங்குமென்உள் ளம்......
அறிவின்கண் கள்திறந்து மேதையாக்கும் மேன்மை
அறியாதோர் இல்லையுல கில்......
அறியாமைத் தாழுடைத்து புத்தொளி தந்தும்
அறியேன் தமிழ்கடலா ழம்......
காலத்தின் முன்பிறந்து மூப்பறியா துன்இளமை
ஞாலமே போற்றும் வியந்து......
தங்கத்த மிழ்மொழியே வையத்தி லுன்புகழ்
செங்கதி ராயொளிவீ சும்......
வான்விழும் நீர்த்துளியும் பூவினுள் துஞ்சிடும்
தேன்துளியும் ஒன்றாய்த் தமிழ்......
புன்னகைக்கும் பூக்களினும் பொற்கிரணம் திங்களினும்
உன்னெழிலென் றென்றும்விஞ் சும்......
ஏழ்சுரத்தில் நீயமர்ந்து என்றன் செவிகளில்
யாழ்மீட்ட உள்ளமுரு கும்......
உலகின் மொழிகளில் உன்றனிடம் வானில்
உலவும் நிலவின் பெரிது......
கற்றதும் உன்னில் நுனிப்புல் பனியடங்கும்
ஒற்றை நிழலின் சிறிது......