என் கணவன்

என் கணவன் மார்பில்
என்காதை புதைத்து
அவர் உள்ளம் உள்ள
அன்புதனை ரசிப்பேன் நாயகனே உன்னிடம்
சின்னதாய் ஒரு சண்டை
சிவந்திடும் உண்கன்னம்
இருபினும் உன்மடி சாயும்
இதமான ஓர் சுகம் நடந்தவை மறைந்திடும்
நான் உன்னை நாள் முழுதும்
நம்பியே வாழ்கிறேன் நல்
நண்பனாய் நீஎனை தாங்கியே
உள்ளதால்உனக்குள்ளே நான் வாழ்வேன்
தோழனே நீ யானய்
தோள் சாயும் சுகம் தேட
வீரனே உன் அன்பில் என்
வீரத்தை வெகு தூரம் தள்ளி விட்டேன்

எழுதியவர் : பிரியன் (12-Dec-16, 9:42 am)
Tanglish : en kanavan
பார்வை : 213

மேலே