புயல்
வர்தா புயலது வந்தது சென்றது!
யாரொடு அதற்கு இத்தனை கோபம்!
போரது செய்ததுபோல் விளைத்தது சேதம்!
வேரொடு கொய்து பெயர்த்தது மரங்கள்!
மரங்கள் நட்டோம் மழை வரவேற்க
இரக்கம் இன்றி மழையொடு வந்து
மரத்துடன் பொருது அறுத்து சிதைத்து
சேர்ந்தது புரியாத புதிர்களுள் ஒன்றாய்!