ஆட்டு கெட

பங்குனி திங்கள் ...
பெளர்ணமி இரவு ... .
நடுக்காட்டு மேட்டில். ..
நானிட்டேன் கட்டில்....
கல் மூங்கில் கை விட்டு தனி உறங்க. ...
ஆணியிட்ட செருப்பும் ...
அவிழ்த்த இடத்தில்
அயர்துறங்க .....
ஆட பத்திகிட்டு. ..
ஊர சுத்தி நாலு தெச , போன என் உடம்பு....
ஏதோ , ஒரு தேசத்தில் அழைவது போல்
கனா கண்டேன். ..
பின் விழும் பனியில்
போர்வை விட்ட வெளியில். .
குளிர் பனி என்ன உசுப்பி விட ....
சட்டென நானெழுந்த வேளையில...
பனி விழுங்கும் முயலு ....
காத வெடச்சு வெரண்டு பார்க்கும். .
அந்த இடம் என் ஆட்டு கெட. ...

எழுதியவர் : (16-Dec-16, 8:14 pm)
சேர்த்தது : குருமுருகன்
Tanglish : aattu keda
பார்வை : 85

மேலே