நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

போராட்டங்களுடன்
போராடியே வாழ்க்கைப்
போர்களத்தில் ஓய்ந்துதான் போவேனோ..??!!

வெற்றிக் கனவுகள்
வெறும் கனவாய் போக
வெதும்பி துடித்துதான் போவேனோ ..??!!

முட்டி மோதி
முயற்சி பல செய்து
முடியாமல் உடைந்துதான் போவேனோ ??!!

அறிவு இருந்தும்
அன்பான மனமிருந்தும்
அதிர்ஷ்டமின்றி அடங்கித்தான் போவேனோ ??!!

துயரம் துரத்தினாலும்
துக்கம் உயிர்நிறுத்தினாலும்
துணையெவருமின்றி துவண்டுதான் போவேனோ ??!!

வாழ்க்கை என்பது விதை -அதில்
வாகை என்பது வளர்ந்த மரம் -நான்
வாழாமல் வாடித்தான் போவேனோ...??!!

நகரும் ஒவ்வொரு நிமிடமும்
நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும்
நல்லது தொட்டு தீமை வரைக்கும்
எல்லாம் விதி செயல் எனில்
திண்ணிய இதயமும்
எண்ணிய இறையும் எல்லாம்
பொய்த்துதான் போகுமோ ???

என்னுடன் மோதிப்பார்
உன் இறுதிவரை ....
விதியே ...
நான் வீழ்வேன்
என்று நினைத்தாயோ ....!!!!
என்றும் எவராலும்
அழிக்க முடியாத
ஜீவன் .....
என்றும் என்றென்றும் ...!!!!

எழுதியவர் : Jeevan (17-Dec-16, 11:53 pm)
சேர்த்தது : Ever UR Jeevan...
பார்வை : 236

மேலே