புரிந்துணர்வு
வாழ்க்கை என்னும் விளையாட்டு
**************************************
நால்வரும் புரிந்து கொண்டாலும்
ஐந்தாவது ஆள் புரிந்து கொள்ளாமலேயே பிரிந்து போகிறார்
பாடையிலும்
பாடையை தூக்கும்
அந்த நால்வருக்காக
என்ன செய்தார் என்றால்.....
எதுவும் இல்லை.....
சந்தேகம் கொண்டார்.....
கோபம் கொண்டார்......
இப்பொழுது புரிந்து கொள்கிறார்.....
என்ன செய்வது.....
வாழ்க்கை முடிந்து விட்டது.....
இருக்கும் வரை
உண்மையாக வாழுங்கள்.....
உண்மையோடு வாழுங்கள்.....
உண்மை எதுவென்று பிரித்து உணருங்கள்.....
அன்போடு வாழுங்கள்.....
நம்பிக்கை கொள்ளுங்கள்.....
நாளை என்பது நிரந்தரம் இல்லை.....
~ பிரபாவதி வீரமுத்து