நான் கண்ணீரில் மூழ்கியவன்

நான் கண்ணீரில் மூழ்கியவன்.
நடை பழகும் போது
நடை பழக்க யாருமில்லை என்று
தத்தி நடந்து கண்ணீரில்
மூழ்கியவன் நான்.


சாலைகள் ஓரமாய்
தந்தையுடன் நடந்துபோகும்
வாலிபர்களை கண்டு
எனக்கு தந்தையில்லை என்று கண்ணீரில் கதரியவன்
நான்.


பாசத்துக்காய் நான்
ஏக்கிய போது
சிலர் செய்த துரோகத்துக்காய்
நான் கண்ணீரில் மூழ்கியவன்.


போலியான உலகில்
போலியான உறவுகள் என்னை
ஏமாற்றுகையில் நான்
என்னை மறந்து
கண்ணீரில் மூழ்கியவன்
நான்.



எனக்காய் பேச யாருமில்லாத
போது எனக்குள்
என்னை சிதைத்துக் கொண்டு கண்ணீரில் மூழ்கியவன்
நான்.



உலகம் என்னை பார்த்து
அனாதை என்ற போது
என் உயிரை கிழித்து கதரியவன் நான்.


என் கண்ணீர் பார்த்து
கதற கதற சிரித்தவர்களை
பார்த்து கண்ணீரால்
வாடியவன் நான்.


எங்கு போனாலும்
அனாதை என்ற போர்வையில் புகுத்தப்பட்டோன்
கண்ணீரில் மடிந்தோ
போனேன்..........!!!!



பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (18-Dec-16, 3:58 pm)
பார்வை : 95

மேலே