உன்னை உணர்ந்தால்

உன்னை உணர்ந்தால் .....,


மனிதன் ஒருவன் கோழை என்றால்
அடுத்தவன் இடத்தில்
அறிவுரை கூறும்
தலைக்கனம் பெற்றவன்..,

மனிதன் ஒருவன் வீரன் என்றால்
தனக்குத் தானே
அறிவுரை கூறும்
இலக்கணம் பெற்றவன்..,


தன்னை உணரா மனிதன்
இறவா பிணம் போல்
மானிட விலங்கும் பின்
அதையும் தாண்டியதொரு மண்ணில்
அழியா அழுக்கு...,


உணர்ந்தவன்...,
பெறுமை ஏற்க்க மாட்டான்
உணரா மனிதன் மனதில்
வறுமை கொண்டு
பெருமை நாடிடும்
பொய்மையின் மொத்த உருவமாவான்...

மனிதா அறிவாய் அன்புடைய..
இறைவா புரிவாய் பண்புடைய..
எல்லாம் தருவாய் நட்புடைய ...

- கலைவாணன்

எழுதியவர் : கலைவாணன் (18-Dec-16, 6:19 pm)
Tanglish : unnai unarnthaal
பார்வை : 138

மேலே