எசப்பாட்டு காலப் புடுச்சு கடன வாங்கி

காலப் புடுச்சு கடன வாங்கி
ஊணொறக்கம் இல்லாம
நாத்து நட்டுக்
காத்திருந்தோம் சின்னம்மா
நாத்து நட்டுக்
காத்திருந்தோம் சின்னம்மா

காத்தடிச்ச வேளையிலே
பூத்திருந்த பயிரெல்லாம்
தூக்கி கிட்டு போயிடுச்சே
சின்னம்மா
தூக்கி கிட்டு போயிடுச்சே
சின்னம்மா

மடியிலொரு கணமுமில்ல
விதியநொந்து பயனுமில்ல
வேதனைகள் தீராதோ
சின்னம்மா - மன
வேதனைகள் தீராதோ
சின்னம்மா

உசுரு நாங்க விட்டாலும்
ஒப்பாரி வைப்பதற்கு
ஊரிலொரு உறவில்லையே
சின்னம்மா
ஊரிலொரு உறவில்லையே
சின்னம்மா

வேளாளர் வாழ்க்கையிலே
விளக்கேத்தி வைப்பதற்கு
வேண்டுகிறோம் சாமியிடம்
சின்னமா
வேண்டுகிறோம் சாமியிடம்
சின்னமா


- தர்மராஜன் வெங்கடாச்சலம்

19-12-2016

எழுதியவர் : (19-Dec-16, 1:25 pm)
பார்வை : 72

மேலே