காதெலெனும் இனிய இசை

காதெலெனும் இனிய இசை!

தடதடவென மனம் இடிபோல் இடிக்க,
விண்ணிலிருந்து இறங்கிய மின்னலோ என நான் வியக்க,
அவள் முகத்திலிருந்து பூத்தப் புன்னகையது,
காதெலெனும் விதையை என் மனதில் விதைத்ததே;

மனதில் பிறந்த முதன் மொட்டு,
என்னுயிரின் கருவெனும் இதயத்தில்,
நன்மணம் நிறவி இதழ்கள் விரிந்தெழுந்து,
வண்ணப்பூவாய் ஒளிர்ந்து மலர்ந்ததே;

இனியத் தாளத்துடன் இதயகீதமது,
மனம் பரவசத்துடன் குதூகலித்து,
மெய்மறந்து உளம்குளிர்ந்து நடனமாட,
காதலெனும் கோயிலிலே குடி நானும் புகுந்தேனே;

குளித்துக் குடமேந்தி ஈரச்சேலையணிந்து,
புன்னகையுடன் நீயும் கடந்தென்னை செல்கையிலே,
உந்தன் கூந்தலிலிருந்து கீழ்விழுந்த பூவதனை கையெடுத்து,
முகர்ந்து நான் வருடி மோகியும் உருகினேனே;

சுவர்க்கம் என்பதும் இதுவே போலும்,
இக்காதலுக்கு ஒரு இணை இனியேது?
புத்துயிர்த்தரும் பூத்துளிர்த்த காதலிலே,
எனது இதயத்தில் நீயும் கலந்தமர்ந்து விட்டாயே!

எழுதியவர் : Kolkata sampath (23-Dec-16, 6:13 pm)
பார்வை : 110

மேலே