பாவி மக ஒன் நெனப்பு
கண்ணுக்குள்ளே மலர்ந்த காட்டுச் சிறுக்கி
கண்ணால பேசினா என்ன மயக்கி...
காத்துல எழுதினா ஏதோ கிறுக்கி
காணாமப் போனாளே வெளஞ்ச பருத்தி......
சின்ன ஒதட்டில் நெலவா சிரிச்சாளே...
கொஞ்ச நேரத்தில் மனசப் பறிச்சாளே...
கல்லு செலயாய் நின்னப் போதிலே
மின்னல் ஒளியாய் மறஞ்சு போனாளே......
பாவி மக ஒன் நெனப்பு
ஆவி போல வந்து ஆட்டுதடி
தேதி போல நெஞ்சும் கிழியுதடி
தேவத ஒன்னத் தேடி வாரேன்டி......
கால் கொலுசின் ஓச கேட்டு
கண்ணு முழி வியந்து நோக்குதடி...
ஒன் மூச்சுக் காத்து வாசம்
வீசும் தெசயில் காலு ஓடுதடி......
துள்ளி ஓடும் புள்ளி மானே...
தூண்டிலில் சிக்காத தங்க மீனே...
ஒருநொடி ஒன் முகம் பார்த்து
பலயுகம் நான் கடந்து போனனே......
நெனப்பு எல்லாம் அனலாய் கொதிக்க
நீரை ஊத்திப் போக மாட்டியா...
ஒன் வெரலு பட்டாலே போதும்
வெளஞ்ச நெலமாய் தேகம் மாறுமே......