நிற்கும் நிற்கும் நொடிகள்

நிற்கும் நிற்கும் நொடிகள்
நித்தம் நித்தம் நகர...

நெஞ்சுக்குழியோரம் காதல் வந்து மலர...

விரலோடு விரல் கோர்த்து
என் இடையோரம் உன் இதழ் பாட
வருவாயா...!!??

தனியாக சிரிக்கிறேன்...

பனியாகி மிதக்கிறேன்...

புரியாது திகைக்கிறேன்....

புதிராகி கிடக்கிறேன்...

விடையாக நீ வருவாயா...!!??

இமையோடு சுமை சேர்த்தாயே...

இனிதாக எனை ஈர்த்தாயே....

இதழோடு இதம் சேர்ப்பாயா...

எனை ஏற்ப்பாயா...????

#சிவனிறைச்செல்வி

எழுதியவர் : சிவனிறைச்செல்வி (25-Dec-16, 10:23 am)
சேர்த்தது : Sivaniraichelvi
பார்வை : 141

மேலே