சொல்லமுடியாத ஓர் உணர்வு
உன் சிரிப்பில் மழலை தோன்றும்
உன் சிறப்பில் சிறைப்படுவேனோ
உன்னை பார்க்கும் நேரமெல்லாம், என்னிடமிருந்து போகும் தனிமை
துணை சேரும் நேரம் வரும், அதுவரை துயில் தவிர்ப்பேன் நான் .
காலை சூரியன் உன் முகத்தில், கனல் தோன்றும் உன் கோவத்தில்
மாலை வரை காத்திருப்பேன்,முழு நிலவை என் முகத்தோடு பொறுத்திருப்பேன்...