சாமியார்களென்ற போர்வைக்குள் திருடர்கள்,

ஊழல் பெருச்சாளிகளும்,
மடியில் கனமுள்ளவர்களும்
தங்களின் நிலையை உணர்ந்து, புது பது வழிமுறைகளில் மேலும்
மேலும் ஊழல்களை நிகழ்த்த திட்டமிடுகிறார்களே தவிர,
தங்களைத் திருத்திக் கொள்ள விரும்புவதே இல்லை...

இதயமே கோவிலென்று கொள்கை பரப்பியவர்களின் உண்மை நிலை அறிவீர்களா??...

அவர்களின் இதயத்திற்கு எது தேவையோ,
அதை எடுத்துக் கொள்வார்கள்...
உதாரணமாக பணம் தேவை என்றால் அதை பதுக்குவார்கள்..
பெண் தேவை என்றால் அதை அடைவார்கள்...
பொன் தேவை என்றால் அதை பதுக்குவார்கள்...

இப்படி தவறான ஆனமிகக் கொள்கையோடு,
ஆசிரமங்களில் விபச்சாரம் செய்யும்
காவி உடைக்காரர்கள் பலரைக் காண்கிறேன்...

உண்மையில் இதயத்தின் தேவை எதுவென்று உணராத இவர்களைப் போன்ற போலிச் சாமியர்களின் கால்களில் விழுந்து கிடக்கும் மூடர்களைக் கண்டாலே வெறுப்புணர்வே மேலோங்குகிறது...

கோவில்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுகையில், மக்கள் தொகையின் எண்ணிக்கை மிக குறைவாகவே தோன்றுகிறது..

எல்லா பாவங்களையும் செய்துவிட்டு, கொவில்களைக் கட்டிவைத்து கடவுளை கல்லென சிலையில் வடித்து,
பூசை செய்தால் பாவமெல்லாம் தீர்ந்து போகுமென்ற மூடநம்பிக்கையே தலைதூக்கிக் காணப்படுகிறது...

ஆசிரமங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது,
கோயில்களின் எண்ணிக்கைகளோடு போட்டி போட்டு...

ஆசிரமங்களில் உள்ள காவிகளைத் தரிசிக்க ஏழை, எளிய மக்கள் செல்வதில்லை...
பெரிய பெரிய பணக்காரர்களே நாடிச் செல்கிறார்கள்...

கோவில்கள் மற்றும் ஆசிரமங்களின் பெயரில் அதிக அளவிலான சொத்துகள் இருக்கின்றன..
காவி வேடத்தில் உலாவும் காமுகர்களை அதிக அளவில் காண முடிகிறது...

சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கிய காமுகன் நித்தியானந்தா போன்ற போலிச்சாமியார்களின் காலில், " சாமியே எங்களைக் காப்பாற்றும். ", என்று விழுபவர்கள் எப்படி நல்லவர்களாக இருப்பார்கள்???...

இன்றைய இளைஞர்களில் பலருடைய மனநிலையில் சாமியாரானால் சகலமும் அனுபவிக்கலாமென்ற எண்ணமும் உருவாகி
வருவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது...

கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் தானென்ற அகந்தை உள்ள திருடர்களே சாமியார்கள் வேடமிட்டு
திரிகிறார்கள்...
கருணையுணர்வு சிறிதும் இல்லாதவர்கள்..

யோகநிலை பற்றிய தவறான போதனை,
ஆன்ம ஒழுக்கமின்மை,
தானே உயர்ந்தவனென்ற அகங்காரம் போன்றவற்றால்,
நிரம்பி வழியும் சாதாரண திருடனின் காலில் விழுவதா??...

கோவில்களில், ஆசிரமங்களில், ஆலயங்களில், கற்சிலைகளில் ஈடிணையற்ற கடவுளைத் தேடும் மூடநம்பிக்கையாளர்களை பார்க்கையில் நான் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்கிறேன்..
அதே வேளையில் எல்லாத்திலும் நிறைந்துள்ள கடவள் ஒருவனே என்ற கொள்கையில்
நான் வள்ளலாரின் வழி நடக்கிறேன்...

எங்கும் எதிலும் ஆண்டவனைக் காண்கிறேன்...
அதை உணராத மூடர்களே தவறான கொள்கைகளோடு உலா வருகிறார்கள்...

எது உண்மை, எது பொய் என்பதை பகுத்தறிவுள்ள நீங்களே
சித்தித்து அறிவீர்கள் என்ற நம்பிக்கையில் இச்சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Dec-16, 12:53 pm)
பார்வை : 181

சிறந்த கட்டுரைகள்

மேலே