தவறி தொலைந்துவிட்டேன்

தவறி தொலைந்து விட்டேன்
என்னை தொலைத்துவிட்டேன்
உன்னை மறந்திருந்தால் நான்
கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்
என்னை மறந்ததனால் நான்
தவறி தொலைந்துவிட்டேன் ....

மனதை பார்க்காமல்
அழகை பார்த்தனால்
ரணமே மிஞ்சியதே
மீண்டும் நான் காதலை நினைக்க
என் மனமே அஞ்சியதே ...

பூக்கள் கனமா ???-- உனக்கு
மறந்திடும் மனமா
மறந்தால் மரிப்பேன்
உனக்கு தெரியுமா
விடுதலை வருமா
நிம்மதி வருமா
இது வாழ துடிக்கும்
மனதின் வலிதானம்மா

எழுதியவர் : ருத்ரன் (26-Dec-16, 7:10 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 205

மேலே