​நட்புலகு

முகநூலால் முத்தென
அலையைனும் பசுமை​ !​
​அகநூலாய் நெஞ்சினில்
பூத்திட்டப் பூஞ்சோலை ​!

முகவரியறியா முகங்கள்
குடியேறுது உள்ளத்தில் !
வடிகாலாய் மாறுகிறது
வடிக்கின்ற வரிகளால் !

தமிழன்னை தந்திட்டதோ
தமிழர்க்கும் வரமானதோ !
குழுமத்தில் கூடுகிறோம்
குதூகலம் அடைகிறோம் !

குறைகளையும் கொட்டுகிறோம்
நிறைகளையும் பகிர்கிறோம் !
மகிழ்ச்சியைப் பெறுகின்றோம்
மனங்குளிர தொடர்கின்றோம் !

அறிவுலகைக் காண்கிறோம்
அறிஞர்களுடன் பழகுகிறோம் !
வளர்கின்றன குழுமங்களும்
வளர்க்கின்றன தமிழறிவை !

அன்றாடம் நிகழ்கிறதிங்கு
அலசுவதற்கு கருத்தரங்கு !
திண்டாட்டம் நமக்குத்தான்
உண்டாகுதே நேரமின்மை !

குடும்பத்தில் ஒன்றானது
உடன்பிறந்த உறவானது !
நட்புவட்டம் விரிவடைந்து
கண்மாயும் கடலாகிறது !

இதயங்கள் இன்பமாகிறது
இலவசங்கள் இல்லாமலே !
சான்றிதழ்கள் பெறுவதால்
சான்றோரும் வாழ்த்துகிறார் !

இதைவிட தேவையென்ன
இவ்வுலகில் நமக்கெதுவும் !
உள்ளவரை எனக்கென்றும்
உள்ளத்தில் நிம்மதிதானே !

இன்றும் என்றும் நிச்சயம்
இதுவே எம் நட்புலகு !​

​பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Dec-16, 2:35 pm)
பார்வை : 568

மேலே