புத்தாண்டே வருக -கங்கைமணி

புத்தாண்டே!.... வருக!...,
ஒவ்வொரு வருடமும் நீ வருகிறாய்,
புன்னகையுடனும்.,புதுப்பொலிவுடனும்
நாங்களும் வரவேற்கிறோம்!
மதுப்பாட்டில்களுடனும்-
மயங்கிய விழிகளுடனும்!.
இதோ! இப்பொழுதும் வருகிறாய்!
பழையன மாறும்-
புதிய சிந்தனைகள் ஊறும்,
என்ற நம்பிக்கையில்.
முற்ப்போக்கு சிந்தனையும்
முன்னேறும் முயற்ச்சிகளும்
முடங்கிப்போன மனிதர்களாய் !.....
புரட்சியும், எழுட்சியுமற்ற
புது உணர்வு எதுவுமற்ற
வாசமில்லா மலர்களாய் !.....
போதையின் பாதையில்
பெண்டிரையும் இழுத்து வந்து-
பெருமை பெற்ற புனிதர்களாய்.,
இதோ !! தயாராகிவிட்டோம் !
உன்னை வரவேற்க,....
இதுவே எங்களின் கடைசி தம்மு!
இதுவே எங்களின் கடைசி தண்ணி !
என்ற உயரிய குறிக்கோள்களோடு.,
அந்த...பழைய இளைஞர்களாய்!....
-கங்கைமணி