வாழ்க்கையில் கவிதை சில நேரம் கைக்கூ மாதிரி தான்

வாழு, வாழ விடு.! -

அழகும் ஆசையும் இயற்கையானது.
உழைப்பும் கற்பனையும் உன்னதமானது.

ஆத்திகனோ நாத்திகனோ கடவுள் கையெடுத்துக்கும்பிட கட்டாயப்படுத்தவில்லை.

நல்லதும் கெட்டதும் நடப்பதுவும் நடக்காமல் தப்பிப்பதுவும் உன் கையில் தான் உள்ளது.

காதலிப்பவனையும் கைம்மாறு செய்பவனையும்
கடைக்கண் கொண்டு பார்க்க வேண்டும் என்று
கடவுளுக்கு கட்டாயமில்லை.

கடவுளும் கம்ப்யூட்டர் மாதிரி தான், அவரவர்
டேட்டா பேசில் விதிகள் கட்டளைகள் ஏற்கனவே
எழுதப்பட்டுள்ளன.

குற்றங்கள் தண்டனைகள் கடவுளின் ப்ரோக்ராம் படி
நடக்கின்றன என்று நினைவில் கொண்டு அதிலிருந்து தப்பிக்கப்பாருங்கள், குறைந்த பட்சம்.

நல்லதையே நினைத்து பேசி செய்து பிரச்சனைகளிலிருந்து தப்பித்து கடந்து செல்லுங்கள்
வாழ்க்கையும் ஒரு நீண்ட சாலை.

அதில் விபத்தும் டோல்கேட்டும் உங்களைத்தேடி வரும், நீங்கள் தான் அதை நோக்கி செல்கிறீர்கள் என்பதை உணராமலே.

ரசித்து ருசித்து வாழத்தான் இந்த வாழ்க்கை,
சந்திக்க சந்திக்கத்தான் இன்பம், சிந்திக்க சிந்திக்கத்தான் துன்பம்.

மனக்கால்குலேட்டரை ஆப் செய்யுங்கள்,தேவைக்கு அதிகமாக குழம்பினால் உங்கள் தடம் மாறி விடும்.

சிரிப்பையும் சிந்தனையையும் இணைகோடுகளில் ஓட விட்டு உழைத்துப்பாருங்கள், அலுப்பு தெரியாது.

சிகரெட்டு தரும் இன்பம் போதை தரும் இன்பம் இதெல்லாத்தையும் விட உங்கள் மனதுக்குள் கற்பனை செய்து இன்பம் காண இங்கே ஏராளமான
விஷயங்கள் உள்ளன. அதில் தான் உண்மையான சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

விவேகானந்தருக்கும் விஸ்வாமித்திரருக்கும்
உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ளுங்கள்,
நீங்கள் காந்தியாவதும் கோட்செயாவதும்
உங்கள் கையில் தானே உள்ளது.

அழகை ரசியுங்கள் பூங்காவில் பூக்களை தொடாதது போல், வனப்பும் வசீகரமும் வாழ்க்கையில் தினம் தினம் உங்களை அலங்கரிக்கும்.

அலட்டிக்கொள்ளாமல் அவசரப்படாமல் அவஸ்தைப்படாமல் வாழ ஆசைப்படாதீர்கள்.

ஆசைப்பட்டால் வீரம் விவேகம் அறிவு உழைப்பு - இவைகளை கையகப்படுத்தி ஆண்டவன் அல்லது அதிர்ஷ்டம் இவற்றின் அனுக்கிரகத்துடன் அடுத்த கட்டம் எது என தடுமாறாமல் நகருங்கள்,

நாளைய இன்பத்திற்கு இன்று துன்பத்தில் உழல்வது அர்த்தமற்ற செயல், இன்றைய இன்பத்தை எடுத்தெறிந்து விட்டு நாளைய எட்டிக்காயை ஏன் நினைக்க வேண்டும்.

வாழ்க்கைக்கடலில் மூழ்கிப்போய் முட்டாளாகி விடக்கூடாது; நீந்திச்சென்று உலகமே வியக்க அறிவாளியா நீங்கள் அல்லது மிதந்து வாழ்க்கையை ரசிக்க நீங்கள் ஞானியா - என்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை.

- கவிஞர் செல்வமணி.

எழுதியவர் : செல்வமணி (31-Dec-16, 9:26 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 660

மேலே