2017 மலர்க வளர்க

புத்தாண்டே வருக
புவி சிறக்க வருக
இன்னல்கள் குறைத்து
இன்பங்கள் பெருக்குக
மரங்கள் வளர்க்கும்
மன்னர்கள் பெருக்குக
உறவுகள் மேம்படும்
உள்ளங்கள் பெருக்குக
ஏமாற்றம் தாங்கும்
வலிமை பெருக்குக
வன்முறை துரந்த
வையகம் பெருக்குக
மனிதம் போற்றும்
மனங்கள் பெருக்குக
ஏற்றங்கள் சேர்க்கும்
எண்ணங்கள் பெருக்குக
உழைப்பைப் போற்றும்
தன்னம்பிக்கை பெருக்குக
தோழமை போற்றும்
உறவுகள் பெருக்குக
தினமொரு பொன்னாளாய்
விடியல்கள் பெருக்குக
2017 இனிதாய் மலர
மனமான வாழ்த்துக்கள்.

எழுதியவர் : அருண்மொழி (1-Jan-17, 2:25 pm)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 336

மேலே