பெண்மை

மஞ்சள் பொடி தேய்க்கையிலே
தங்க பொடி நெஞ்சுக்குள்ளே
தங்கமேனி சிங்காரமே கொஞ்சிவாடி நெஞ்சுக்குள்ளே
பட்டிகாட்டு மேனிக்குள்ளே சிட்டுகாடு மலருதடி
பாவாடை தாவணியும் தானாக ஆடுகையில் துள்ளாத என் மனசு
தள்ளாட்டம் போடுதடி
கொஞ்சும் மேனி சிங்காரமே
கொஞ்சம் வாடி என் நெஞ்சுக்குள்ளே
அஞ்சுகங்கள் கொஞ்சுகையில்
மீஞசிபோகும் உன்னழகில்
மயங்குதடி.என் மனசு
பரங்கி பய ஆடையிலே பாவையவ
பூத்திருந்தும்
பாவிபய விழிகளிலே கூவமது பூக்குமடி
தமிழனவன் மொழிகளிலே
தாவணிதான் பேரழகு
என் கள்ளவிழி பார்வையிலும்
தமிழச்சி தான் சொல்லழகு
நித்தம் என் நெஞ்சுக்குள்ளே
பூக்குமடி உன்னழகு

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Jan-17, 6:24 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : penmai
பார்வை : 1011

மேலே