தமிழினைப் பார் செம்மொழியென்று பேர்
மலரினைப் பார் முல்லை என்று பேர் --அதன்
மௌனத்தைப் பார் புன்னகை என்று பேர் !
மாலையைப் பார் ஆரஞ்சு வண்ண அழகென்று பேர் --அதன்
அமைதியைப் பார் அந்திக் கவிதை என்று பேர் !
காலையைப் பார் செவ்வானம் என்று பேர் ---அதன்
செங்கதிரைப் பார் நமக்கு அது விடியல் என்று பேர் !
மங்கையைப் பார் மௌனம் என்று பேர் ---அவள்
பார்வையைப் பார் தூய நிலவுக்கு நேர் !
தமிழினைப் பார் செம்மொழியென்று பேர் ---அதன்
வளமையைப் பேண் உனக்கு நிகர் யார் !
----கவின் சாரலன்