குப்பைத்தொட்டி
பிச்சைக்காரர்களுக்கும் தெருநாய்களுக்கும்
உணவுவிடுதி
பிளாஸ்டிக் பொறுக்குபவனுக்கு
புதையல்
தேவை தீர்ந்த பொருட்களின்
நினைவிடம்
அனாதை சிசு காப்பகங்களில்
தொடக்கம்
தூய்மையை சுத்தத்தை போதிக்க
தன்னை அலங்கோலமாகிக் கொண்ட
குப்பைத்தொட்டி