நினைவு

எண்ணமும் நீ
என் இயக்கமும் நீ!
இன்பமும் நீ
என் இதயமும் நீ!
கண்ணிலும் நீ
என் கருத்திலும் நீ!
என்னிலும் நீ
என் எழுத்திலும் நீ!
கனவிலும் நீ
என் கற்பனையிலும் நீ!
துக்கமும் நீ
என் தூக்கத்திலும் நீ!
சந்தோசமும் நீ
என் வாழ்வின் பெரும் சந்தேகமும் நீ தான் !
அழகியும் நீ
என் அரக்கியும் நீ !
இம்மையிலும் நீ
எம் மறுமையிலும் நீ !
அம்மையும் நீ
என் அழகு மகளும் நீ !
என்னை ஆட்கொண்ட சந்தோசகடல் நீ !
என்னை அழவைத்த சந்தேகதேடல் நீ!
என் பிறப்பின் பொருள் நீ
நீயே தான் ,
என் சுகத்தின் ஆருயிர் இம்சை அரசி நீ தான் நீ தான்

நீயே தான்!!!!!!!;;

எழுதியவர் : தமிழ் பிரியன் சிவா (2-Jan-17, 9:29 pm)
சேர்த்தது : saran 64
Tanglish : ninaivu
பார்வை : 54

மேலே