என்னை மறந்ததேன்

வழி காட்ட நீயென்று நினைத்தேன்
வலி தந்து போனதெங்கே?
மொழி யென்றால் உன்வாய்மொழி யென்றிருந்தேன்
விழி குத்தி சென்றதெங்கே?

என் வான நிலவென மகிழ்ந்தேன்
அமா வாசை வந்ததென்ன?
என் இதய துடிப்பென இருந்தேன்
இதயம் கிழிக்கச் செய்ததென்ன?

கார்கால மேகமென நனைந் திருந்தேன்
பாலைவனம் பரிசாய் எதற்கு?
மழைக்காலச் சாரலென குளிர்ந் திருந்தேன்
எனக்குமட்டும் வறட்சி எதற்கு?

சோலைவனம் தேவையில்லை உன்புன்சிரிப்பே போதும்
சோறு உண்ணும் ஆசைபோச்சே..
மாலைகூட தரவேண்டாம் உன்நட்புமட்டும் போதும்
தாறுமாறாய் புத்தி யாச்சே..

மரத்தின்மேல எழுதிவச்ச பெயர்கள் அழியாது
நான் இதயம்மேல எழுதிவிட்டேன்
மறக்கமாட்டேன் என்றுதானே எந்தன்வாழ்வில் வந்தாய்
இன்று மறந்துவிட்டு ஏன்கவிதைதந்தாய்..??

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jan-17, 11:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 463

மேலே