கொதிக்குதையா என் மனசு

மனிதனென்ற போர்வையிலே நாடமாடும் மிருகமதை காணயிலே கொதிக்குதய்யா மன கொதிப்பு
ஊரான ஊருக்குள்ளே உழவனவன் வாழ்வதனை மண்ணுக்குள்ளே புதைக்கையிலே
கொதிக்குதய்யா மன கொதிப்பு
மனிதம் வாழும் சோலையிலே கள்ளம் வாழும் கூட்டம் கண்டு கொதிக்குதய்யா மனகொதிப்பு
தோள் கொடுத்த தோழனுக்கும் துரோகமதை செய்கையிலே
கொதிக்குதய்யா மனகொதிப்பு
பெற்றவரே ஆனபின்னும் தெருவில் விடும் மனிதமதை
காணுகையில் கொதிக்குதய்யா
மனகொதிப்பு
பெற்றமகள் என்ற பின்னும்
இச்சை கொள்ளும் மனிதமதை
காணயிலே கொதிக்குதய்யா
மனகொதிப்பு
காதல் என்னும் புனிதமதில் காமமென்ற கூவமதை கலக்கையிலே கொதிக்குதய்யா.மன கொதிப்பு
காவி உடை போர்வையிலே
காமலீலை நடத்துவோனை காண்கையிலே கொதிக்குதய்யா மனகொதிப்பு
கற்பரசி கண்ணகியின் சிலையருகே கற்பை விலை கூறுவோனை காண்கையிலே
கொதிக்குதய்யா மனகொதிப்பு
மதத்தின் பேரை வைத்து.மாதுவையே மடியமர்த்தி நடமாடும் காவிகளை காண்கையிலே கொதிக்குதய்யா மன கொதிப்பு
கல்வி என்ற கருவறையை
விலை கூறி கூவுகையில்
கொதிக்குதையா மன கொதிப்பு
தலைநிமிர்ந்த தமிழனழன்
தலை குனிந்து போகையிலே
கொதிக்குதய்யா
மனகொதிப்பு
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை புதைத்துவிட்டு
கள்ள உறவு மனிதமதை காண்கையிலே கொதிக்குதய்யா மன கொதிப்பு
உயிரோடு விளையாடி உறவோடு உயிர் பறிக்கும்
அரசியலை காண்கையிலே
கொதிக்குதய்யா
மனகொதிப்பு
ஏழையவன் சிரிப்பினிலே இறைவனவன் இருக்கையிலே
இறைவன் என்ற மாயையிலே
அலைகின்ற மனிதமதை காண்கையிலே
கொதிக்குதய்யா மனகொதிப்பு