ஓட்டை வீட்டு குடிசையிலே
ஓட்டை வீட்டு குடிசையிலே வாழ்ந்திடவே வழியுமில்லை
ஒழுகி விழும் மழையினிலும் ஒதுங்கிடவும் மரமே இல்லை
ஏழையவன் கண்ணீரையோ துடைத்திடவும் யாருமில்லை
அடுப்புக்குள்ளே இருட்டு பூனை சுகமாக உறங்கையிலும்
வீட்டுக்குள்ளே அடுப்பெரிக்க
அரிசி இல்லை பருப்புமில்ல
பாழுமிந்த ஏழை இங்கே மானம் மறைக்க ஏதுமில்லை
கசக்கி கட்ட கந்தை கூட வீட்டுக்குள்ளே ஏதுமில்லை
உயிரில்லா கற்சிலைக்கோ பாலை வார்க்கும் மானிடமோ
உயிருள்ள பொற்சிலைக்கோ
பாலை வார்கமறுக்குதுவே
நஞ்சை காக்கும் நாகத்துக்கே
பூஜை பன்னும் மானிடமோ
அன்பை கேக்கும் மனிதமதில்
விஷத்தை கக்கும் நாகம் போல.ஏழை தனை சீறுதுவே
உண்மை இங்கே உறங்குகையில்
மனிதமிங்கே மடிந்த பின்னே
நிலமகளே நீ எதற்கு
நீயும் மடிந்துவிடு