தனிமையில் ஒரு நாள்

தனிமையில் ஒருநாள் தவித்திருந்தேன்
உனைமட்டும் தானே நினைத்திருந்தேன்
இனிமையைத் தேடி அலைந்திருந்தேன்
கண்ணுக்குள் நீவர அழுதிருந்தேன்

என்றோ எனக்குள்ளே வந்துவிட்டாய்
என்னிதயம் உன்னிடம் தந்துவிட்டேன்
இன்றோ எப்படி மறந்துவிட்டாய்
நன்றோ உன்செயல் யோசித்துப்பார்

தனிமையில் தவிக்க விடாதே
உன் நினைவுகள் என்னை விடாதே

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Jan-17, 10:58 pm)
Tanglish : thanimayil oru naal
பார்வை : 595

சிறந்த கவிதைகள்

மேலே