மறக்கவில்லை மாறாதிருக்கிறேன்

நினைவை விட்டு அகலாது
நெஞ்சில் பனியாய் உறைந்திருக்கும் அந்த நாட்கள்..
மறந்துவிட்டாயா என்று கேட்கிறாய்..
எப்படி மறக்க முடியும்..!
நமது ஞாபகங்கள் தண்ணீரில் எழுதப்பட்டவை அல்ல..
பாறையில் கீறப்பட்டவை..
காற்றிற்கோ.. புயலுக்கோ கலைந்து போகாது..
எத்தனை மழை பெய்தாலும் எளிதில் அழியாது..
அதனை அழிக்க ஆண்டுகள் ஆயிரம் வேண்டும்..
முடிந்தால் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் கழித்து வந்து
இதே கேள்வியைக் கேள்..
அப்போதும் உன் பெயர் சொல்லி மட்டுமே
என் தோட்டத்தில் பூக்கள் பூத்துக்கொண்டிருக்கும்...