முட்டளாக்கப்படும் தமிழர்கள்

முட்டளாக்கப்படும் தமிழர்கள்

என் இனிய தமிழ் உறவுகளுக்கு . . .

தமிழர்கள் என்றாலே முட்டாள்கள் என்ற நிலையை எல்லோருமே உருவாக்கி கொண்டே இருக்கிறார்களே . . .
இதற்கு என்ன பதில் கூறபோகிறோம் நாம் . . .

தயவு செய்து என் வினாக்களுக்கு பதிலை பெற முயற்சி செய்யுங்கள் பதில் உங்களிடம் இருந்தால் நாம் எவ்வளவு பெரிய முட்டாளாக்கபடுகிறோம் என்பதை நான் சொல்ல தேவையில்லை நீங்களே ஒப்பு கொள்வீர்கள் . . .

ஒரு நள்ளிரவில் நம் முதல்வர் மருத்துவமனைக்கு திடீரென கொண்டு செல்ல பட்டு சரியாக 71 நாட்கள் கழித்து அதே போல் ஒரு நள்ளிரவில் காலமானதாய் சொன்னார்கள் இடைபட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதற்கு அவரவர் கற்பனையை கட்டவிழ்த்து விட்டார்களே தவிர உண்மை இதுவரை தெரியவில்லை . . .

முதல்வர் இறந்ததாய் அறிவிக்கபட்ட அதே நாளில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு சேர ஆதரித்துதான் புதிய முதல்வரை தேர்ந்தெடுத்து இரவோடு இரவாக ஒரு புதிய பதவி பிரமாணமும் செய்து வைத்தனர்.

அவ்வளவு பெரும்பான்மை உள்ள ஒரு கட்சி தன் தலைமையை நான்கு சுவர்களுக்குள் வைத்தே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஆனால் எதற்கு மிக பெரிய நாடகம் நடத்தினார்கள் ?

பொது செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள் கட்சி அலுவலகத்தில் வைத்தே அத்தகை முடிவை தேர்ந்தெடுத்திருக்கலாம் ஆனால் இவர்கள் மீடியாக்கள் முன் செய்த நாடகம் கெஞ்சல், எல்லாமே எதற்கு என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இரவோடு இரவாக புதிய முதல்வரை தேர்வு செய்தவர்கள் இப்பொழுது ஏன் வேறு ஒருவர் முதல்வராக வேண்டும் என்று மீடியாக்கள் வழியே அறிக்கை விடுகிறார்கள்

இப்பொழுது நினைத்தாலும் சட்டமன்ற உருப்பினர்களின் ஒப்புதலை பெற்று புதிய முதல்வரை மாற்றி கொள்ளும் தகுதி இருந்து எதற்காக நம் முன் இத்தனை நாடகங்களை அரங்கேறுகிறார்கள்

இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கபடுவதில்லை என்று தெரிந்தும் மறைந்த முதல்வருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று எதற்காக அல்லது யாரை ஏமாற்ற தீர்மானம் கொண்டு வருகிறார்கள்

இவை ஒரு புறம் இருக்க மக்களின் நலனுக்காக கூட்டணி என்று மார்தட்டி கொண்ட மக்கள் நல கூட்டணி இன்று யார் நலன் கருதி கலைக்க பட்டது

சரியாக ஆறு மாதம் கூட தாக்கு பிடிக்க முடியாத ஒரு கூட்டணியை வைத்து கொண்டு யாரை ஏமாற்ற வாக்கு கேட்டு வந்தார்கள் இதில் வீர வசனங்கள் வேறு

தமிழகத்தில் இருக்கும் இவர்கள்தான் இப்படி என்றால் உச்ச நீதிமன்றம் அதை விட ஒரு படி மேலே போய் அடிக்கடி தன் நாடகத்தை அரங்கேற்றி கொண்டே இருக்கிறது

ஜல்லி கட்டு நடத்த கூடாது என்ற ஒரே தீர்ப்பை காட்டி காலம் காலமாய் வாழ்ந்த நம் கலாச்சார திருவிழாவை நடத்த விடாமல் செய்ததே . . .

ஆனால் இது வரை குறைந்த பட்சம் பத்துக்கும் மேற்பட்ட காவிரி விவகார தீர்ப்பை வெற்று காகிதமாய் மட்டுமே உள்ளதை நினைத்து வெட்கபட்டதுண்டா ?

அவ்வபோது ஒரு தீர்ப்பு வருகிறது தண்ணீர் திரந்துவிடுங்கள் என்று பதிலுக்கு கர்நாடகமும் ஒரு அறிக்கை விடுகிறது முடியாது என்று

இத்தனை தீர்ப்புகள் அளித்தும் தண்ணீர் பெற்று தரமுடியாத ஒரு உச்சநீதிமன்றத்திற்கு நாம் ஜல்லிகட்டு நடத்த தடை விதிக்க என்ன தார்மீகம் இருக்கிறது என்று இதுவரை யாரும் கேட்டதுமில்லை

6000 ஆயிரம் கன அடி என்பது இப்பொழுது 2000 ஆயிரம் கன அடியாய் சுருங்கிய பொழுதும் அவை கூட நம் மண்ணுக்கு கிடைக்காமல் போனதை நினைத்து சிறிதேனும் தோல்வியை ஒப்பு கொண்டதுண்டா

மத்திய அரசு சொல்லவே வேண்டாம் இத்தனை ஆண்டுகளாய் வழக்கு நடைபெறும் பொழுது நாம் தண்ணீர் கேட்டு கோரிக்கை வைத்தால் ஒரே பதில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று

ஆனால் வழக்கு தீர்ப்பு சொல்ல பட்டவுடன் எந்த கூச்சமும் இல்லாமல் இதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகிறோம் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது

தீடீரென இரவு எட்டு மணிக்கு பாரத பிரதமர் அவர்கள் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்

கருப்புபணம் ஒழியும் கள்ள பணம் ஒழியும் வாழ்க்கை சிறக்கும் என்று பகல் கனவு கண்டவர்களுக்கு கனவில் கூட நஞ்சு கலந்தார் போல

மூட்டை மூட்டையாய் கருப்பு பணம் அதுவும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அங்கங்கே சிக்குகின்றன இவர்களை நடுரோட்டில் வைத்து அறைந்து எப்படி வந்தது என்று கேட்க வேண்டியதுதானே

இன்னமும் அதே ஏசி காரில் அழைத்து வந்து சொகுசாக விசாரணை நடத்துகிறார்கள்

வங்கி வாசலில் வேலைக்கு விடுமுறை எடுத்து, உணவுக்கு கூட வழியில்லாமல் வரிசையில் நின்று உழத்தை பணத்தை கூட எடுக்க முடியாமல் தவிக்கிறோமே இதுதான் உங்களின் சாதனையா

இதை விட கொடுமை வங்கி வாசலில் நின்று உயிரை விட்டவர்களுக்கு ஆறுதலுக்காக கூட யாரும் இரங்கள் சொல்வதில்லை அப்படி சொன்னால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நிர்கதியாய் நிற்க வைத்து ஆட்சி நடத்து இவர்களுக்கா காலையில் இருந்து வரிசையில் நின்று வாக்களித்தோம்

என் இனிய உறவுகளே கட்சியை பார்த்து, ஜாதியை பார்த்து, மதத்தை பார்த்து வாக்களித்த நம் முன்னோர்கள் செய்த தவறை இனியேனும் திருத்தி கொள்ளுங்கள்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் அளவில் உள்ளவர்களை தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் ஒரு முறை செய்யும் தவறினால் உங்களின் வாரிசுகள் நாங்கள் ஒவ்வொரு 5 ஆண்டுகளும் அடிமைகளாய் வாழுகிறோம்
பணம், நகை, நிலம் என தன் சந்ததியினருக்கு சேர்த்து வைக்கும் அன்பான உறவுகளே இனியேனும் நல்ல அரசியலை எங்களுக்காய் உருவாக்கி தாருங்கள்

நாளைய பொழுதாவது எங்களுக்கான விடியலாய் அமையட்டும்.

மதிப்பிற்குரிய முகநூல் மற்றும் இணைய நண்பர்களே தயவு செய்து இதை யாரும் லைக் செய்ய வேண்டாம்
ஒரு நடிகையின் புகைபடத்திற்கு கூட 100 லைக் வாங்கி கொள்ள முடியும் அவை தேவை இல்லை முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்
சிறிதேனும் மாற்றம் வருமா என பார்ப்போம் . . . . .

ஏக்கங்களுடன்
ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (6-Jan-17, 10:46 am)
பார்வை : 384

சிறந்த கட்டுரைகள்

மேலே