எசப்பாட்டு - 11 படுத்துறங்கும் வேளையிலே
எசப்பாட்டு - 11
படுத்துறங்கும் வேளையிலே
மனமொடிந் திருக்கிறியே
ஏனென்று சொல்வாயோ சின்னம்மா - நீ
ஏனென்று சொல்வாயோ
சின்னம்மா
காணொளியில் கண்டதொரு
காட்சி யெனை மனமுடைய
வைத்ததின்று சின்னைய்யா- என்
மனமுடைய வைத்ததின்று
சின்னைய்யா
புத்தாண்டு கொண்டாடி
புன்னகைத்து பெண்ணொருத்தி
பாதியுடல் மேல்மறைத்து
நள்ளிரவில் வீட்டருகில் வந்திறங்க
சின்னைய்யா
காத்திருந்த கழுகிரண்டு
பின்தொடர்ந்த வள்வழிமறித்து
கன்னத்தில் முத்தமிட்ட
காட்சியினைக் கண்டதுமே - சின்னையா
மனமுடைந்து விட்டேன் நான்
சின்னைய்யா
நாட்டில் பல இளைஞர்கள்
நாளும் சுற்றிவருகின்றார் - மனக்
கட்டிழந்து குற்றங்கள் செய்கின்றார்
சட்ட மொன்றும் மதியாமல்
சின்னம்மா - பலர்
குற்றங்கள் செய்கின்றார் சின்னம்மா
அவ்விருவர் உன்மகனாய்ப்
பிறந்திருந்தால் என்செய்வாய்
சின்னம்மா - சொல்லெனக்கு
சின்னம்மா
கையிரண்டும் துண்டித்து
காரி முகமுமிழ்ந் திட்டு
அமிலத்தை கண்ணிரண்டில்
ஊற்றிடுவேன் சின்னைய்யா - பின்
சரணடைவேன் காவலிடம்
சின்னய்யா
- தர்மராஜன் வெங்கடாச்சலம்
06-01-2017